தமிழகத்தில் இன்று
சென்னை:
பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்க தமிழ்நாட்டில் தடை வருகிறது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவிப்பதை தடுப்பதற்காக புதிய சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது தமிழக அரசு.
இதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் புதன் கிழமை தாக்கல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில்அரசியல்வாதிகளும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளும் பதவிக் காலங்களில் மிக குறுகிய காலத்தில் கோடீஸ்வரன்களாகிவிடுகின்றனர். பல கோடி மதிப்புக்கு அசையாச் சொத்துக்களை வாங்கிக் குவித்து அதிபர்திகளாகி விடுகின்றனர்.
ஊழல் தடுப்புச் சட்டப்படி இத்தகையவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தாலும், வாங்கிக் குவித்தசொத்துக்களை பறிமுதல் செய்ய இயலவில்லை. அத்தனைசொத்துக்களும் பினாமி பெயர்களில் இருப்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடம் இல்லை.
கடந்த கால ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் இந்த சிக்கல் ஏற்பட்டதை தமிழக அரசு அனுபவபூர்வமாகஉணர்ந்தது. இதையடுத்து பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்குவதை தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
அதை எப்படி நிறைவேற்ற டியும் என்பதை ஆராய்ந்து, சொத்துக்கள் வாங்கும் போதும், விற்கும்போதும் பத்திரப் பதிவு செய்தாக வேண்டும். அந்தசட்டத்தில் கடுமையான நிபந்தனைகளுடன் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பினாமி சொத்துக்களை தடுக்க முடியும் என்று அரசு கருதுகிறது.
அதன்படி 1908ம் ஆண்டு பதிவு செய்தல் சட்டம் திருத்தப்படுகிறது. அதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் வியாழக்கிழமை நிறைவேறியது.
இச்சட்டத்தை தாக்கல் செய்த பதிவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், ""பொதுவாழ்விலும், நிர்வாகத்திலும் ஒளிவு மறைவின்றி செயல்கள்நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இல்லாத ஒரு நபரின் பெயரிலோ அல்லது ஒரு நபரின் பெயரை இரவலாக பயன்படுத்தியோ சொத்துப் பத்திரங்கள் பதிவு செய்வது இனிமேல் தடுக்கப்படும்.சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்கள் அனைத்திலும் வாங்குபவரும், விற்பவரும் கையெழுத்திட வேண்டும் என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications