For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இந்திய வறட்சி: உதவிக் கரம் நீட்டுகிறது ஐ.நா. சபை

டெல்லி:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவி வரும் கடும் வறட்சியை சமாளிக்கஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு பிரிவுகள் நிவாரண மற்றும் உதவித் திட்டங்களைஅறிவித்துள்ளன.

ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகியமாநிலங்களில் இவர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தமாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் சாதாரணது முதல் கடுமையான அளவுக்குவறட்சி இருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில், 1.6 மில்லியன் டாலர் அளவுக்கு வறட்சி நிவாரணத் திட்டத்தை யூனிசெப்நிறுவனம் தயாரித்துள்ளது. மாநில அரசுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகுஇத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. வைட்டமின் ஏ, குளோரின் மாத்திரைகள் உள்ளிட்டபல்வேறு மருந்துகளை வழங்குவதற்கு யூனிசெப் நிறுவனம் உதவும்.

ராஜஸ்தானில், வறட்சி ஒழிப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க ஐக்கிய நாடுகள்சபை முடிவு செய்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள ஐ.நா. சபையின் யு.என்.எப்.பி.ஏ.அலுவலகத்திலிருந்து இந்த குழு இயங்கும். இக்குழுவை நிர்மாணிக்க யு.என்.டி.பி.உதவும்.

வறட்சி ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறுபிரிவுகளும், ராஜஸ்தான் மாநில அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்படமுடிவு செய்துள்ளன.

ராஜஸ்தானில் ரூ. 1.1 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை வழங்க உலகஉணவுத் திட்ட அமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இதுதவிர, உணவு மற்றும்விவசாயக் கழகம், ஆய்வுக் குழுவை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளது. ராஜஸ்தானில்நோய்க் கண்காணிப்புப் பிரிவை அமைக்க உதவுவதாக உலக சுகாதாரக் கழகம்கூறியுள்ளது.

ஆந்திராவில், மழை நீரை சேமித்து வைத்து அதை உபயோகப்படுத்துவது தொடர்பானதொழில்நுட்ப உதவியை அளிக்க யூனிசெப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதவிரகைப்பம்புகள், நீர் தர கண்காணிப்பு கருவிகளை நீர்த் தொட்டிகளில் அமைக்கவும் அதுஉதவி செய்யும்.

வறட்சி நிவாரணப் பணிகளில் மாநில அரசுகள் திருப்தி - மத்திய அரசு

இதற்கிடையே, வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்திருப்திகரமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளின் செயலாளர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நடந்தது.அக்கூட்டத்தில் ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகளின் சார்பில் கலந்து கொண்டபிரதிநிதிகள் மத்திய அரசின் வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து திருப்திதெரிவித்தார்கள். மத்திய அமைச்சரவைச் செயலாளர் பிரபாத் குமார் கூட்டத்திற்குத்தலைமை வகித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X