தமிழகத்தில் இன்று
லண்டன்:
பலாலி விமானப் படைத் தளத்தில் புதன்கிழமை விடுதலைப் புலிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இலங்கை ராணுவத்தினருக்கு உணவுப் பொருள், ஆயுதம் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கு பலாலி விமானதளம்தான் பயன்படுத்தப்படுகிறது.
விடுதலைப் புலிகள் தரப்பில் வீசப்பட்ட நான்கு குண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்ததாகவும், மற்ற மூன்று குண்டுகளால் விமான ஓடுதளத்திற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இலங்கை அரசு அதிகாரிகள தெரிவித்தனர்.
பலாலி விமான தளத்தின் தெற்குச் சுற்றுச் சுவர் பகுதியில் குண்டு வீசப்பட்டது என்று பிரிகேடியர் பலிதா பெர்னாண்டோ தொலைபேசியில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு சாலை வழியாக செல்லும் பாதையை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பலாலி விமானதளம் மட்டுமே,யாழ்ப்பாண ராணுவத்தினருக்கு உயிர் நாடியாக விளங்குகிறது.இது சேதமடைந்தால், ராணுவத்தினர் பாடு மிகவும் சிக்கலாகி விட்டது.
இதற்கிடையே, கொழும்புத்துறையில் விடுதலைப் புலிகள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இறந்த புலிகளின் உடல்கள் சிதறிக் கிடந்ததாக அரசுப் பத்திரிகை தகவல் மையம் கூறியது. ராணுவத் தரப்பு சேதம்குறித்துத் தெரியவில்லை.
யாழ்ப்பாணம் வெறிச்சோடுகிறது:
இதற்கிடையே, யாழ்ப்பாணம் நகரிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெறியேறி விட்டதால் நகரம் வெறிச்சோடி வருவதாக அங்குநிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள், ராணுவத்திற்கு இடையிலான சண்டை உக்கிரமடைந்திருப்பதால் மக்கள் வெளியேற்றம் அதிகரித்து வருவதாகஅவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications