தமிழகத்தில் இன்று
1999-2000-ம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.79 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் துவக்கப்பட்டு 46 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச வருவாய் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சிறந்த நிர்வாகம், புதிய வர்த்தகக் கொள்கைகள், தொழில்நுட்பம் போன்ற காரணங்களால் நிறுவனத்தின் வருவாய்அதிகரித்தது என்று இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனில் பஜாஜ்தெரிவித்தார்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளாக லாபம் கிடைத்து வருகிறது. கடந்த10 ஆண்டுகளாக விமானக் கட்டணம் உயர்த்தப்படாத நிலையிலேயே லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் போக்குவரத்தில் புதிதாக 9 விமானங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதில் 5விமானங்கள் போயிங் ரகத்தையும், 4 விமானங்கள் ஏர்பஸ் வகையையும் சேர்ந்தவை. இது தொடர்பாக, விமானத்தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இன்ஜின் விநியோகிப்பாளர்களிடம் பேச்சு நடத்தப்படு வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாற்றப்படும். 50 இருக்கைகள் கொண்டவிமானங்களை போக்குவரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத்தனியார்மயமாக்கும் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகளாவிய அளவில் விடப்பட்ட டெண்டரைஅடுத்து நிறுவனத்தை வாங்க 8 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்வுசெய்யப்படும்.
சமீபத்திய எரிபொருள் விலை உயர்வால் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 10 கோடி கூடுதலாகச் செலவாகிறது. இதனால்,கட்டண உயர்வு இருக்கும் என்று கூறமுடியாது. கட்டணத்தை உயர்த்துவதால் மட்டும் செலவைக் குறைக்கமுடியாது.கட்டண உயர்வால், பயணிகள் வரவு குறையவும் வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கான புதிய விடுமுறை கால பயணத்திட்டங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் பஜாஜ்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications