தமிழகத்தில் இன்று
துபாய்:
வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்க கத்தார் அரசு முடிவு செய்துள்ளது.
ஜூன் 1-ம் தேதி முதல் கத்தாரில் வேலைவாய்ப்புகளை தேசியமயமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. வளைகுடா நாடுகள் பெரும்பாலானவற்றில்ஏற்கனவே வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது கத்தார் நாடும் அந்த வரிசையில் சேரவுள்ளது.
முதல் கட்டமாக மின் துறையில் முற்றிலும் கத்தார் நாட்டவருக்கே வேலைவாய்ப்பு அளிக்க கத்தார் அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 18 மின் துறைபிரிவுகளில் 50 சதவீத வேலைவாய்ப்பை கத்தார் நாட்டவருக்கு அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுநடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு மின்துறை அமைச்சர் அப்துல்லா பின் ஹமாத் அல் அத்தியா கூறியுள்ளார்.
இருப்பினும் வளைகுடா நாடுகள், ஒட்டுமொத்தமாக வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புகளை மறுக்காது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகியகாலத்தில், தொழில்நுட்பத்தில் சிறந்த வேலையாட்கள் கிடைப்பது கடினம் என்பதால் வெளிநாட்டினரை உடனடியாக வளைகுடா நாடுகள் தடை செய்யாதுஎன்று கூறப்படுகிறது.
வெளிநாட்டினரையே முழுமையாக நம்பியிருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைக் குறைப்பதற்காகவே உள்நாட்டுத் திறமையைப்பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படக் கூடிய ஒன்றுதான். பெண்களுக்கும் அதிக வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர்அத்தியா கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications