தமிழகத்தில் இன்று
புது தில்லி:
பெட்ரோலியப் பொருட்களின் விலை குறித்து மத்திய அரசு ஜூலையில் மறு பரிசீலனை செய்யும் என்று மத்தியபெட்ரோலியத் துறை இணை அமைச்சர் இ. பொன்னுசாமி தெரிவித்தார்.
புது தில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளின்உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றியமைப்பதாவேண்டாமா என்று ஜூலையில் மத்திய அரசு ஆராயும்.
அதற்கு முன்னதாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு மாற்றுமா, மாற்றாதா என்பதைஇப்போதைக்குக் கூறமுடியாது. சர்வதேசச் சந்தையில் தற்போது குரூட் எண்ணெய்யின் விலை நிலையாக உள்ளது.
தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை நகரங்களில் சமையல் எரிவாயு இணைப்பு கேட்டு பதிவு செய்துகாத்திருப்போர் பட்டியலில் இருந்த அனைவருக்கும் ஏப்ரல் மாதம் இணைப்பு தரப்பட்டுவிட்டது. நாட்டின் மற்றநகரங்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இணைப்பு தர நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயற்கை எரிவாயு வளம் நாளொன்றுக்கு 40 லட்சம் கியூபிக் மீட்டர் என்ற அளவில் உள்ளது.தற்போது 20 லட்சம் கியூபிக் மீட்டர் எரிவாயு தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பொரேஷனில் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் 95லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும். இதற்காக, ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொச்சி-கோவை-கரூர் இடையேயான 300 கிலோமீட்டர் நீள பைப்லைன் திட்டம் இந்த ஆண்டு டிசம்பரில்துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கும் மதுரைக்கும் இடையே பைப்லைன் அமைக்கும் பணியைமேற்கொள்ள பெட்ரோனெட் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றார்பொன்னுசாமி.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications