For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

11-5-2000 வியாழக்கிழமை, நம் இந்திய நாட்டின் மக்கள் தொகை நூறு கோடி. மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தைபிடித்திருக்கிறோம். நூறு கோடி என்று ஆனந்தப்பட முடியாத விஷயம் இது.

ஒரு வகையில் சொல்லப் போனால் நூற்றி இருபதைந்து கோடியாக வேண்டிய மக்கள் தொகை இன்று நூறு கோடியில் கட்டுப்பட்டு நிற்பது சற்று ஆறுதலானவிஷயம் தான்

சரி என்று இப்படியே விட்டுவிட்டால் .. அடுத்தடுத்து வருகின்ற ஆண்டுகளில் நூற்று பத்து, நூற்று இருபது கோடி என்று எகிறிக்கொண்டே செல்லும் இந்தமக்கள் தொகை.

இன்றே நூறுகோடி மக்கள் தொகையை, இன்னும் சற்று குறைத்து காண்பித்திருக்கலாம். பத்து வருடங்களுக்கு முன் மக்கள் தொகையின் தீவிரத்தை உணர்ந்துபட்டி தொட்டியெல்லாம் - மக்கள் தொகை கட்டுப்பாடு, குடும்பக்கட்டுபாடு என்று மத்திய மாநில அரசாங்கங்கள் படு தீவிரமாகஇறங்கினதால்தான் இன்று நூறுகோடி!

இதே நேரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் தொகை கட்டுப்பாடு பற்றி அரசுகள் சரியாகவேஅக்கறை எடுத்துக் கொள்வில்லை. படுதீவிரமாக செயல்பட்டோம், இன்று குறைந்துவிட்டது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது. அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால், இன்றுநூறுகோடிக்கும் குறைவாகவே நமது நாட்டின் மக்கள் தொகை இருந்திருக்கும்.

சீனா! என்பார்கள். மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடு சீனாதான் என்பார்கள். ஆனால் அங்குள்ள நிலைமையை வேறு. சீனாவின்பரப்பளவு இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம். விவசாயம் செய்ய அங்கே நிலம் உண்டு.இந்தியாவில் இதே நிலை தொடர்ந்தால் - நிற்கக்கூடஇடமில்லாத நிலை ஏற்படும்.

மறுபடியும் மக்கள்தொகை கட்டுப்பாடு பிரச்சாரங்களை கிராமங்கள், படிப்பறிவு இல்லாத மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த விஷயத்தை பலதடவை அரசியல்ரீதியாகவும் சரி, பொது நலத்துடனும் சரி அரசுக்கு எடுத்துச் சொல்லி எந்த பயனும் இதுவரை ஏற்படவில்லை என்பதுவேதனையானதுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தலித் மக்களுக்கு ரிசர்வேஷன் கொடுத்தது மாதிரி, பெண்களுக்கு ரிசர்வேஷன் கொடுத்தால்தான் பெண்களின் நிலை சீராகும்.33 சதவீதம் என்பது ரிசர்வேஷன் என்பது வருகின்றவரை கனவுதான்.

இதைத்தடுப்பது, பெண்கள் அரசியலுக்கு வந்து விட்டால். நமது இடம் காலியாகிவிடும் என்று நினைக்கின்ற ஆணாதிக்கவாதிகள் தான்! இதற்கென்றுஒரு விழிப்புணர்வு நாட்டில் ஏற்படவேண்டும்.

வழக்கறிஞர் என்கிற முறையில் நான் நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் டைவோர்ஸ்! அழகான பாரம்பரியமும், கலாச்சாரமும் மிக்கதுஇந்தியா. இன்று இந்திய கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும் அமெரிகர்கள் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

மற்ற நாடுகளும் ஆர்வத்துடன் தெரிந்து கொண்டிருக்கின்ற நிலையில் விவாகரத்து என்பது சற்று உறுத்தலான விஷயம்தான். ஒரு வகையில், பெண்கள்சுதந்திரமாக தனக்குள்ள உரிமையை கேட்கிறார்கள். சுதந்திரமாக வெளியேற ஆரம்பித்திருக்கிறார்கள் என்றாலும் விவாகரத்து அதிகமாகஆண்களே காரணம்.

விட்டுக்கொடுக்காமை என்பது இன்னும் ஆண்களிடம் இருக்கிறது. விவாகரத்து என்பது எந்தளவிற்கு பெண்களின் சுதந்திரத்தையும், உரிமையையும்எடுத்துக் காட்டுகின்றதோ அதற்கு எதிர்ப்பதமாக ஆண்வர்க்கத்தின் அதிகார விட்டுக்கொடுக்காத போக்கையும் காட்டுகிறது.

ஒரு சிலர் விட்டுக் கொடுத்தும்,பெண்களுக்கு உரிமை, சுதந்திரம் கொடுத்தும் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.

இன்னும், இந்தியாவில் படித்த படிக்காத நகரம், கிராமம் என்று பெண்களுக்கான கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன. இந்த கொடுமைகளுக்குஎதிராக தமிழகத்தில் உள்ள பெண் அமைப்புகளும், அரசியல் கட்சிகளில் உள்ள மகளிர் அமைப்புகளும் குரல் கொடுப்பதுடன், விழிப்புணர்வையும் பெண்களிடம்ஏற்படுத்தித்தான் வருகின்றன.

கொடுமைகள் தொடர்வது மாதிரியே, அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தன் சுதந்திரம், உரிமை,கட்டுப்பாடுபற்றி ஓரளவு கிராமத்துப் பெண்கள் கூட தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம் தான்.

மகளிர்கான 33 சதவீத இடஒதுக்கீடும், அவர்களுக்காக பெண்களுக்கு கிடைக்கும் ஸ்பெஷல் ரிசர்வேஷனும்தான் இந்தியப் பெண்கள் முன்னேற்றத்திற்குவழிவகுக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X