தமிழகத்தில் இன்று
லண்டன்:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ராணுவத்தினருக்கு இலங்கை அரசு புதிதாகவாங்கியுள்ள நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது.
வியாழக்கிழமை பலாலி விமான தளத்தில் விடுதலைப் புலிகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். வடக்குப்பகுதியில் உள்ள ஒரே விமான தளம் இது மட்டுமே. இந்த விமான தளம் சேதமடைந்தால் யாழ்ப்பாணத்திலுள்ளராணுவத்தினருக்கு உணவு மற்றும் ஆயுத விநியோகம் பாதிக்கப்படும். எனவே புலிகள் புதிய தாக்குதலைத் தடுக்கபுதிதாக வாங்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை அரசு அனுப்பி வைத்துள்ளது.
ஆயுதங்கள், பலாலி விமான தளத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது என்று அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யானை இறவு முகாமை விடுதலைப் புலிகள் பிடித்த நானில் இருந்தே நவீனஆயுதங்களை வாங்கும் நடவடிக்கையை இலங்கை அரசு துவங்கியது. நவீன ஆயுதங்கள் எவை என்பது குறித்துஅரசுத் தரப்பில் விளக்கம் இல்லை. இருப்பினும் விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று மட்டும்தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் அனைத்தும் பலாலியில்தான் இருப்புவைக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களும் இங்கிருந்துதான் செல்கின்றன.
பலாலி விமானதள கண்காணிப்புக் கோபுரம் சேதம்:
இதற்கிடையே, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பலாலி விமான தளத்தில் விடுதலைப் புலிகள் நடத்தியகுண்டுவீச்சில், விமான தளம் பாதிக்கப்படவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் விமானதளத்திலுள்ள முக்கிய கண்காணிப்புக் கோபுரம் தரைமட்டமானதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறியதாக புலிகளின்வானொலி கூறியது.
பலாலிக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை வழக்கம்போல சென்று கொண்டிருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
யாழப்பாணம் செல்லும் சாலையை விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். விமானம்அல்லது கப்பல் மூலமாக மட்டுமே ராணுவத்தினருக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications