தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
மும்பையில் "தாதா" சுட்டுக் கொலை: 10 கொலை வழக்குகளில் தேடப்பட்டவன்

மும்பை:

தெற்கு மும்பையில் பைகுல்லா என்ற இடத்தில் சனிக்கிழமை காலை நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒமர்மொய்னுதீன் ஷேக் (28) என்ற ரவுடி கொல்லப்பட்டார்.

சோட்டா ஷக்கீல் என்ற ரவுடிக் கும்பலைச் சேர்ந்த இவர், 10-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கடத்தல்வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். சனிக்கிழமை அதிகாலை பைகுல்லா பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர்.அப்போது, கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஷேக்கைப் போலீஸார் வழிமறித்து சரணடையும்படிகூறினர்.

ஆனால், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸார் மீது ஷேக் சுட்டார். இதையடுத்து, பதிலுக்குப்போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஷேக், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் இறந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த கூட்டாளி தப்பியோடிவிட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+