For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து

By Staff
Google Oneindia Tamil News
பு-லி-கள் மீ-து தடை தெ-ா-ட-ரும் என்-கி-ற-து பார-தீ-ய ஜன--தா

சென்னை:

இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள நிலையை பாரதிய ஜனதா கட்சிமுழுமையாக அங்கீகரிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் குஷாபாவ் தாக்கரேதெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க.வக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தலைவராக டாக்டர் கிருபாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில மாவட்டநிர்வா-கிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இந் நி-ல-யில் திங்கள்கிழமை காலை சென்னைவந்த அவர் தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் கட்சியினருடன் தொடர் ஆலோசனைநடத்தினார்.

பின்னர் நி-ரு-பர்-க-ளி-டம் அவர் அளித்-த பேட்-டி:

கேள்வி: இலங்கைப் பிரச்சனையில் எந்த நடவடிக்கை எடுக்க தயாராகஇருப்பதாக பிரதமர் வாஜ்பேய் கூறியிருக்-கி-றா-ரே?

பதில்: மத்திய அரசின் நிலையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

கேள்வி: இலங்கையில் உள்ள 7 தமிழர் கட்சிகள், இந்தியாவின் உதவி போதாதுஎன்று கூறியுள்ளனவே?

பதில்: அக்கோரிக்கை பற்றி மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும்

கேள்வி: என்-ன திடீர் சென்னை பய-ணம்?

பதில்: மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிளை சந்தித்துப் பேசுவதற்காக வந்துள்ளேன்.மாலை 5 மணிக்கு மும்பை செல்கிறேன்.

கேள்வி; விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்றுசிவசேனா வலியுறுத்தி உள்ளதே?

பதில்: புலிகள் மீதான தடை சரியானது தான். இந்-தத் தடை நீடிக்கும்.

கேள்வி: பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

பதில்: அது பற்றி கட்சி கூடி தான் முடிவெடுக்கும்.

கேள்வி: முதல்வர் கருணாநிதியை சந்திப்பீர்களா?

பதில்: நேரமிருந்தால் சந்திப்பேன் என்றார்.
பின்னர் கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில்பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மத்திய அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலம் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 10 கட்டமாக அவர் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். ஒருகட்டத்தில் 6 மாவட்ட நிர்வாகிகள் வீதம் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X