தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
எட்டு நாட்களாக அலைக்கழிக்கப்படும் எய்ட்ஸ் நோயாளியின் உடல்

சென்னை:

எய்ட்ஸ் நோயால் இறந்த கைதியின் உடல் எட்டு நாட்களாக பிணவறையில் கிடக்கிறது. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய (போஸ்ட்மார்ட்டம்) மருத்துவர்களும், ஊழியர்களும் மறுத்து விட்டதால், ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு செல்லப்பட்ட அந்த கைதியின் உடல் இப்போதுசென்னை அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோயாளியின் உடலை அறுத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தேவையான பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதால் பிரேதபரிசோதனை செய்ய முடியாது என்று அரசு டாக்டர்கள் கூறி விட்டனர்.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் தேசப்பன். வயது 40. திருட்டு வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் சென்னைசிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவருக்கு உடல் நிலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பாது, எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ள விவரம்தெரியவந்தது.

இதையடுத்து தாம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள எய்ட்ஸ் பிரிவில் தேசப்பன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு எய்டஸ் நோய்க்கான சிகிச்சைஅளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இம்மாதம் 15ம் தேதி இறந்தார்.

இறந்தவர் கைதி என்பதால் ஆர்.டி.ஓ. (கோட்டாட்சித் தலைவர்) விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.கைதியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் தேசப்பனின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், எங்கு எய்ட்ஸ் நோயாளி என்பதால்பிரேத பரிசோதனை செய்த மறுத்து விட்டனர். எய்ட்ஸ் நோயாளி என்பதால் அவரது உடலை அறுத்து பரிசோதனை செய்யும் போது எய்ட்ஸ் கிருமிகள்,மற்றவர்கள் உடலை தாக்கும். அதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் எங்கள் மருத்துவமனையில் இல்லை. எனவே சென்னை அரசுபொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று அங்குள்ள டாக்டர்கள் கூறி விட்டனர்.

அதையடுத்து கைதியின் உடலை எடுத்துக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். அங்கும் டாக்டர்கள் அதே பதிலை தான் அளித்தனர்.அதனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கே உடலை பெறுவதற்கு கூட டாக்டர்கள் மறுத்து விட்டனர். மருத்துவமனை வளாகத்திலேயே வைக்கக் கூடாது; உடனடியாக எடுத்துச் செல்லுங்கள்என்று கூறிவிட்டனர். இப்பதிலால் சுவற்றில் அடித்த பந்து போல் மறுபடியும் பிணத்தை எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கே வந்து சேர்ந்தனர்போலீசார்.

அங்கே பிணவறையில் தேசப்பன் உடல் எட்டு நாட்களாக கிடக்கிறது. சட்டப்படி பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலையில் பிணத்தை என்ன செய்வதுஎன்று தெரியாமல் போலீசார் குழம்பி போய் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+