தமிழகத்தில் இன்று
முல்--லப் பெரி-யா-று: போராட்-டம் நடத்-த காங், த.மா.கா மு-டி-வு
சென்னை:
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கூட்டுப் போராட்டம் நடத்த த.மா.கா, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.இப்பிரச்சனை தொடர்பாக இதுவரை இரு தரப்பிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.
தமிழகம்-கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் நீர் மட்டத்தை 135 அடியில் இருந்து 152 அடியாக உ.யர்த்த வேண்டும் என்று தமிழகம்வலியுறுத்துகிறது. கேரளா இதற்கு உடன்பட மறுக்கிறது.
குறைந்தபட்சம் 145 அடியாவது உயர்த்த வேண்டும் என்று தமிழகம் மன்றாடி வருகிறது. அதற்கும் உடன்படாத கேரள அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையே டெல்லியில் 19ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
மத்திய நீர் பாசனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேச்சு வார்த்தையில், நிபணர்குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இம்முடிவை இருமாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டன. ஆனால், நிபுணர் குழு வெறும் கண்துடைப்பு என்று த.மா.கா கண்டனம் தெரிவித்தது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை முன் வைத்து காங்கிரசும், த.மா.கா வும் கூட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பைபுதன்கிழமையன்று மூப்பனாரும், தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்தியும் கூட்டாக வெளியிடுகின்றனர். இதற்காக புதன்கிழமைசத்தியமூர்த்தி பவனுக்கு திண்டிவனம் ராமமூர்த்தி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவர் சத்தியமூர்த்தி பவன் (த.மா.கா. அலுவலகம்) வருவது இதுவே முதன் முறை.மூப்பனாரிடமிருந்து சத்தியமூர்த்தி பவனை மீட்போம் என்று பேசி வந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
த.மா.கா. காங்கிரஸ் கூட்டு போராட்ட முடிவை அ.தி.மு.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கும் புதன்கிழமை அவர்கள் விடை அளிக்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications