தமிழகத்தில் இன்று
பிரதமர் வாஜ்பாய் தலையிட வரதராஜப் பெருமாள் கோரிக்கை
சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு தக்க தீர்வு காணவேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) தலைவர் ஏ. வரதராஜப் பெருமாள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில் புலிகளின் கை ஓங்கிவருவதால், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மீண்டும் புலிகளின் வசம் வந்தால் அப் பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். புலிகளின் தற்போதைய நடவடிக்கையால்யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் தமிழர்கள் வலுக்கட்டாயமாக வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியப் பிரதமர் வாஜ்பாய் முயற்சி எடுக்கவேண்டும். இப் பிரச்சினையில் வாஜ்பாய் தலையிட்டுநிரந்தரமான அரசியல் தீர்வு காண முயற்சிக்கவேண்டும் என்றார் வரதராஜப் பெருமாள்.
யு.என்.ஐ..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications