தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் அமைதி ஏற்-ப-டத் தடையாக இருப்பது விடுதலைப் புலிகள் தான் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர்தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, யாழ்ப்பாண தீபகற்பத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது. இலங்கைப் பிரச்சினைக்குத்தீர்வுகாண மத்தியஸ்தம் செய்ய நார்வே நாட்டின் உயர் மட்டக் குழு இலங்கை வந்துள்ளது.
இந் நிலையில், இலங்கை அமைதிக்குத் தடையாக இருப்பது புலிகள் தான் என்ற கருத்தை கதிர்காமர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை பத்திரிகைக்குஅவர் அளித்த பேட்டி:
இலங்கையில் அமைதி ஏற்பட அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புலிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே உள்ளது. ஆனால்,பேச்சுவார்த்தைக்குப் புலிகள் தயாராக இல்லை. எப்போது அழைப்பு விடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
போராடிவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒரே எண்ணம் தனி நாடுதான். அதற்குத் தான் தற்போது அவர் போராடி வருகிறார். அதனால்தான்இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த பிரபாகரன் முன் வரவில்லை. ஆனால், இலங்கை ராணுவத்தை திசை திருப்பவதற்காக, பல முறைபோர்நிறுத்தம் அறிவித்ததோடு அரசுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால், ஒருபோதும் அவற்றை செயல்படுபத்தவில்லை. புலிகளின்நடவடிக்கைகளால் நாங்கள் பலமுறை பலத்த நஷ்டத்தைச் சந்தித்துவிட்டோம்.
இலங்கைக்கு நார்வே நாட்டின் உயர்மட்டக் குழு வந்துள்ளது. அவர்கள் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வதுஎன்பதை ஆராய்ந்து கருத்து தெரிவிக்கவே இலங்கை வந்துள்ளனர். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் மத்தியஸ்தம் செய்ய வரவில்லை.
இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதை இலங்கை வரவேற்கிறது. எந்த வகையில் இந்தியாவின் உதவியை ஏற்றுக்கொள்வது என்று ஆராய்ந்து வருகிறோம் என்றார் கதிர்காமர்.
யு.என்.ஐ.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications