தமிழகத்தில் இன்று
ராமேஸ்வரம்:
-எத்-த-னை அக-தி-கள் -இ--லங்-கை-யி-லி-ருந்-து வந்-தா-லும் அவர்-க-ளை ஏற்-றுக் கொள்-ளும் வகை-யில், தயார் நிலை-யில் மண்-ட-பம்அக-தி-கள் மு-காம் -உ-ள்-ள-து.
இலங்கையில் இருந்து அகதிகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றனர். இது குறித்து மண்டபம் அகதிகள் முகாம் உயர் அதிகாரிகள் கூறியதாவது.:
இலங்கையில் சண்டை மேலும் பரவுமானால் ராமேஸ்வரத்திற்கு அகதிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலங்கை கடற்படை ரோந்து பணி குறைவாக இருக்கும். அந்த நாட்களில் அகதிகள் வருகை அதிகமாக இருக்கும்.
இன்னும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் யாழ்ப்பாணம் காடுகளில் தஞ்சம் புகுந்து இருப்பதாகவும் அவர்கள் பட்டினி மற்றும் நோய்களால்அவதிப்பட்டு-வ-தாகவும் தப்பி வந்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்திய கடற்படையும் தங்களது படகுகள் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் அகதிகள் இங்கே வர பயப்படுகிறார்கள். நேர்மையற்ற சிலபடகுக்காரர்கள் அகதிகளை ஏற்றி வந்து கடல் எல்லை அருகேயுள்ள சிறு சிறு தீவுகளிலும் மணல் மேடுகளிலும் இறக்கி விட்டுச் சென்றுவிடுகிறார்கள். பசி பட்டினியோடு அங்கிருந்து தப்பித்தும் அவதிப்படுகிறார்கள்.
ஞாயிற்-றுக்-கி-ழ-மை அரிச்சல் முனை கடலோரத்தில் தவித்த 75 பேரை இந்திய கடற்படை மேற்பார்வையில் மீனவர்கள் மீட்டு வந்தனர்.நடுக்கடலில் தவிப்பவர்களை, உடனே மீட்க வேண்டும் என்று மாநில மீன் வளத்துறையும்,மாவட்ட உயர் அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர். எத்தனைஅகதிகள் வந்தாலும் சமாளிக்கும்- வ--க-யில், மண்டபம் அகதிகள் முகாம் தயார் நிலையில் இருக்கிறது என்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications