தமிழகத்தில் இன்று
விவசாயிகள் வாங்கிய குறுகிய காலக் கடன் மீதான வட்டி தள்ளுபடி
- அமைச்சர் நேரு
திருச்சி:
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய காலக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறைஅமைச்சர் கே.என. நேரு தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடனாக சுமார் ரூ.830 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்வழங்கப்பட்டுள்ள இக் கடனுக்கு சுமார் ரூ.50 கோடி வட்டியாக வசூலிக்கப்பட்டு வந்தது.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த குறுகிய காலக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் நலனைக் கருதி இனிஇந்த ரூ.50 கோடி கூடுதல் நிதிச் சுமையையும் தமிழக அரசு ஏற்கும்.
வாங்கிய கடனுக்கான அபராத வட்டியைப் பொறுத்தவரை, 60 சதவீதத்தை மாநில கூட்டுறவு வங்கிகளும் (டி.என்.எஸ்.சி.), 30 சதவீதத்தை மாவட்டமத்திய கூட்டுறவு வங்கிகளும், மீதமுள்ள 10 சதவீதத்தை கடன் கொடுத்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளும் ஏற்றுக் கொள்ளும்.அபராத வட்டியாக மட்டும் ரூ.91 கோடி வசூலிக்கப்படவேண்டியுள்ளது.
தற்போது மாநிலத்தில் போதுமான உணவுப் பொருள் கையிருப்பு உள்ளது. 10 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. இதை வைத்து அடுத்த 11மாதத்துக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார் நேரு.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications