தமிழகத்தில் இன்று
மேல்கயான் (மகாராஷ்டிரா)
அதிகாரத்தில் இருப்பதற்காக எந்த அளவிற்கும் செல்ல பாரதீய ஜனதாக் கட்சி தயங்காது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மேல்கயான் என்ற இடத்தில் ஈத்கா மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாட்டை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் செய்ய தவறிவிட்டது. பாரதியஜனதாக்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்தும் ஆட்சியில் பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை.
இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு. அவர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் சுகத்தை மட்டுமே விரும்புபவர்கள். அதற்காக எந்த அளவிற்கும்போவார்கள்.
விவசாயிகள், ஏழைஎளிய மக்கள், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியவர்களின் நலனிற்காக திட்டங்கள் எதையும் இந்த அரசுஅமல்படுத்தவில்லை. அவர்களின் பொருளாதார மேம்பாடு குறித்து இந்த அரசு கண்டுகொள்வதில்லை. அடுத்த ஆட்சியில் மக்கள் அவர்களுக்கு நல்லபாடம் கற்பிப்பார்கள்.
எனது மாமியார் இந்திராகாந்தி, கணவர் ராஜீவ்காந்தி ஆகியோர் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பல சலுகைகள் வழங்கியவர்கள். அவர்கள் செய்தபல்வேறு நலத்திட்டங்களை மக்கள் இன்னும் மறந்திருக்க முடியாது. ஆனால் இந்த அரசிலோ வேலைவாய்ப்புப் பிரச்சனைகள் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பாரதிய ஜனதாக் கட்சியினர் செய்யத் தவறிய நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம். சமுதாயத்தில்நலிந்தோருக்காகப் பாடுபடுவோம். தலித், ஆதரவற்றோர், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர்கள் ஆகியவர்களை உயர்த்துவதே எங்கள் கட்சியின்குறிக்கோளாகும் என்றார்.
கூட்ட முடிவில் சோனியாகாந்தி பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி அங்கே கூடியிருந்த தலித் இன மக்களை சந்தித்துப் பேசினார்.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications