தமிழகத்தில் இன்று
சென்னை:
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் தன் மீதான மோசடிக் குற்றச் சாட்டை நீக்கும் வரைஅவ்வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கும்படி தனி நீதிமன்றத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அரசு நிறுவனமான"டான்சிக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். அரசுப் பதவியில் இருந்தஜெயலலிதா, அரசு நிலத்தை வாங்கியது தவறு என்றும், அதன் மூலம் அரசுக்கு பத்திரப்பதிவில் இழப்பு ஏற்படுத்தி விட்டார் என்றும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள்மீது தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இவ்வழக்கில்இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல்செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ், ஜனவரி 13ம் தேதி வழக்கில்இருந்து ஜெயலலிதாவை விடுவித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.அப்பீல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதாவை வழக்கில்இருந்து விடுவித்தது தவறு என்று தீர்ப்பளித்தது. மீண்டும் இவ்வழக்கில்ஜெயலலிதாவை சேர்ந்து தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டது.
இதன்படி தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கு விசாரணைதுவங்கியது. இந்நிலையில் இவ்வழக்கில் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச் சட்டம்420வது பிரிவின் கீழ் மோசடிக் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டை மட்டும் நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறி, தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில்குற்றப்பத்திரிகையில் 420வது பிரிவிலான குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என்றுஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், தனி நீதிபதி அன்பழகன் இதை ஏற்க மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை என்றுநிராகரித்து விட்டார்.
இதையடுத்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். திங்கள் கிழமை அவர்தாக்கல் செய்த மனுவில், ""உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தனி நீதிபதி என்மீதான மோசடிக் குற்றச் சாட்டை நீக்க மறுத்து விட்டார். அந்த குற்றச் சாட்டுநீக்கப்படும் வரை தனி நீதிமன்றத்தில் டான்சி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications