தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரம்:
யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ள இலங்கை ராணுவத்தினரை மீட்க விமானப் படைதயாராகவுள்ளது என்று விமானப்படை தலைமைத் தளபதி ஏர்மார்ஷல்ஏ.ஒய்.டிப்னிஸ் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்திலுள்ள தென் பிராந்திய விமானப் படை தலைமையகத்தில்விமானப்படை தலைமைத் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ் புதன்கிழமை ஆலோசனைநடத்தினார்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டுள்ள 30,000இலங்கை ராணுவத்தினரை மீட்க இந்திய விமானப்படை பயன்படுத்தப்படும் என்றுசெவ்வாய்க்கிழமை இந்தியா அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆலோசனைநடந்தது. இருப்பினும் தனது வருகைக்கும், இலங்கை விவகாரத்திற்கும் தொடர்புஏதுமில்லை என்று டிப்னிஸ் கூறினார்.
சங்குமுகத்தில் உள்ள விமானப்படை விமான தளத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், இது திட்டமிட்ட பயணம். தென் பிராந்திய விமானப்படை தளபதிகள்கூட்டத்தில் கலந்து கொள்ளவே வந்தேன். இது நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டஒன்று. இதையும்,இலங்கை விவகாரத்தையும் தொடர்புபடுத்திப் பார்க்கத்தேவையில்லை.
இலங்கை செல்வதற்கு விமானப்படையை இனிமேல் தயார்படுத்த வேண்டியஅவசியமில்லை. இந்திய விமானப்படை எப்போதுமே தயார் நிலையில்தான் உள்ளதுஎன்றார் டிப்னிஸ்.
விமானப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய டிப்னிஸ், இலங்கைப்பிரச்சினையில் கடற்படை ஈடுபட்டால் அவர்களுக்கு எந்த வழியில் உதவலாம்என்பது குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்,திருவனந்தபுரம், சென்னை, பெங்களூர் ஆகிய விமானப்படை தளங்களிலிருந்துவிமானப் படை செயல்படும் என்று தெரிகிறது.
முன்னதாக மூன்று நாட்களுக்கு திருவனந்தபுரத்தில் டிப்னிஸ் இருப்பார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பின்னர் அது அரை நாள் பயணமாகமாற்றப்பட்டது. இலங்கை விவகாரமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications