For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காம்ப்ளிக்-கு கல்-தா! மும்--ப கிரிக்-கெட் சங்-கம் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் மும்பையைச் சேர்ந்த வினோத் காம்ப்ளி தேர்வு செய்யப்படாததற்குமும்பை கிரிக்கெட் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம்மாதம் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ம் தேதி ஆசியக் கோப்பைஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியஅணிகள் பங்கு கொள்கின்றன.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில், வழக்கமான வீரர்களுடன்ஹேமங் பதானி, அமித் பண்டாரி ஆகிய இருவரும் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வினோத் காம்ப்ளி, சடகோபன் ரமேஷ் ஆகியோர் தேர்வுசெய்யப்படவில்லை. குறிப்பாக வினோத் காம்ப்ளி தேர்வு செய்யப்படாதது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் கண்டனம்தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சங்கத்தின் செயலர் ரத்னாகர் ஷெட்டி கூறியதாவது:

சமீப காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வினோத் காம்ப்ளி சிறப்பாக விளையாடி வருகிறார். பீல்டிங்கில்சிறப்பாகப் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி கிரிக்கெட்டில் 866 ரன்களும் தியோதர், சாலஞ்சர்போன்ற ஒரு நாள் போட்டிகளில் 600 ரன்களும் எடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் தனது பேட்டிங் திறமையினால் பல போட்டிகளில் இந்தியா வெற்றி பெற காம்ப்ளிஉதவியுள்ளார் என்பதை வாரியமும், தேர்வுக் குழுவும் மறந்துவிடக்கூடாது என்றார் ஷெட்டி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X