முகத்தில் தெளித்த சாரல்...
இந்தியாவின் உதவி இப்-போ-து தேவையில்லை என்-கி-ற--து இலங்-கை
சென்னை:
-இ-லங்-கைக்-கு இந்தியாவின் உதவி தற்போது தேவையில்லை என்று இலங்கை வெளியுறவுத் துணை அமைச்சர் லட்சுமண் கிரில்லா கூறியுள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் தனிப்பட்ட முறையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கிரில்லாசென்னையில் நிருபர்களிடம் பேசினார். யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ள இலங்கை துருப்புக்களை சில நிபந்தனைகளுடன் மீட்க இந்திய அரசு உதவ முன்வந்துள்ளது.இதை இலங்கை வரவேற்கிறது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்களை உடனடியாக வெளியேற்றி வர வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்தியாவின் உதவி தற்போதுதேவைப்படவில்லை. போர்க்களத்தில் இன்னும் நான்கைந்து நாட்களில் உருவாகும் மாற்றங்கள் முக்கியமானது. அதைப்பொறுத்தே யாழ்ப்பாணத்தில்இருந்து ராணுவ வீரர்களை மீட்பது குறித்து முடிவெடுக்கப்படும். அதற்கேற்ப இந்தியாவிடம் உதவி கேட்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
போரை நிறுத்த விடுதலைப்புலிகள் முன்வந்ததை இலங்கை அரசு ஏற்காததில் தவறில்லை. அதற்குமுன்பே குறியிட்ட காலவரையறைக்குள் உள்ளபேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என்றும் அதுவரை யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்கள் போரை நிறுத்தி முகாம்களில் முடங்கியிருப்பார்கள்என்றும் இலங்கை அரசு யோசனை தெரிவித்தது.
அதற்குப் புலிகள் முன்வரவில்லை. 1994 ம் ஆண்டில் இருந்தே புலிகளை பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அழைத்துக்கொண்டேயிருக்கிறோம். அவர்கள்தான்வர மறுக்கிறார்கள். தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கிறார்கள். கடந்த 1987 ம் ஆண்டில் இந்தியா தலையிட்ட போது இருந்த நிலைமைக்கும்,இப்போதுள்ள நிலைமைக்கும் அதிக மாற்றங்கள் உள்ளன.
இப்பொழுது நார்வே நாடு உதவ முன்வந்திருக்கிறது. இலங்கை இனப்பிரச்சனையை தீர்வு காண்பதில் அமெரிக்கா கூட ஆர்வம் காட்டுகிறது. எனவேஇலங்கையில் அமைதி திரும்ப வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளது.
கடந்த 1987 ம் ஆண்டு இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசு தலையிட்டபோது அப்போதிருந்த ராஜீவ் அரசு பலமிக்க அரசாக இருந்தது. தற்போதுஇந்தியாவில் உள்ள கூட்டணி அரசுக்கு சில நிர்பந்தங்கள் உள்ளதை இலங்கை அரசு உணர்ந்துள்ளது. நான் சாய்பாபாவை தரிசிக்கவே இந்தியா வந்தேன்.
இவ்வாறு இலங்கை வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லட்சுமண் கிரில்லா கூறினார். இந்தியாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கொழும்புசென்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications