• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|

இப்-போ-தைய காங்-கி-ரஸ் தலை-வர்

திண்-டி-வ--னம் ராம-மூர்த்-தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி-ர-வில் மாற்-றப்-ப-டு-வார் என செய்-தி-கள்வெ--ளி-யா-கிக் கொண்-டி-ருக்-கும் நிலை-யில் -மாநி-ல காங்-கி-ரஸ் த-லை-வர் திண்டிவனம்ராமமூர்த்தி இண்டியா இன்போ.காம்க்காக அளித்த ஸ்பெஷல் பேட்டி.

மத்திய, மாநில அரசுகள் செயல்பாடு -பற்-றி?

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வந்து முழுமையாக நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தநான்கு ஆண்டு காலத்திலும் ஜெயலலிதா ஆட்சியின் போது என்னென்ன ஊழல் நடந்துஎன்று ஆராய்வதிலும், ஜெயலலிதா மீது வழக்குகள் போடுவதுலுமே --கா-லம் கடத்திவந்தார்கள். அதே நேரத்தில், தி.மு.க. அரசு காலத்தில்...நடந்த ஊழல் விவகாரங்களைஅப்படியே விட்டுவிட்டார்கள். காவல் துறையும் கண்மூடித் கொண்டு விட்டது.

மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த, ரயிலில் அரிசி கடத்திய வழக்கு என்னாச்சு?திருப்பத்தூரில் சந்தன கட்டைகள் எரிந்ததே அந்த வழக்கு என்னாச்சு? இவைகளெல்லாம்மூடி மறைக்கப்பட்டிருக்கி-றது. இது ஒரு உதாரணம்தான். இது மாதிரி பல விவகாரங்கள்மறைக்கப்பட்டிகுக்கிறது என்-றார்.

மத்திய அரசு...என்று யோசித்தவர்.. தொடர்ந்து, ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட கோழி,காடை. கெளதாரி இன்னும் பல உயிரினங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இவைஎல்லாவற்றையும் ஒரே கூட்டில் அடைத்தால் என்னநடக்கும்.முட்டையிடும்அவ்வளவுதான்! இப்படித்தான் இருக்கிறது மத்திய அரசு.

ஈழத் தமிழர்களுக்காக தமிழக தலைவர்கள் குரல் கொடுத்திருப்பது பற்றி.. வைகோ,ராமதாஸ், தமிழக் முதல்வர் கருணாநிதி கூட, போரின் முலமாகவோ,பேச்சுவார்த்தையின் மூலமாகவோ தனி ஈழம் கிடைத்தால் வரவேற்போம்என்றிருப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இப்பொழுது குரல் கொடுப்பது சரி. அமிர்தலிங்கம், சபாரத்தினம், பத்மனாபாஅவர்களோடு இருந்தவர்களை கொன்றது யார்? சிங்களர்கள் இல்லையே.கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்தானே அப்பொழுது யாராவது குரல் கொடுத்தார்களா?

தமிழகத்தில் தங்களுடைய அரசியல் லாபத்துக்காக அதன் வழியாக வருகின்றபொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு லாபங்களுக்காகவே செயல்படுகிறார்கள்.

போராட்டத்தின் மூலமாகவோ, பேச்சுவார்த்தை மூலமாகவோ தனி ஈழம் அமைந்தால்வரவேற்பேன் என்றிருந்தார் முதல்வர் இதற்காக நேரடியாக விடுதலைப்புலிகளுக்குஉதவுகிறார் என்று சொல்லவில்லை. ஆனால் சொன்ன வார்த்தைகள் விபரீதமானவிளைவுகளை ஏற்படுத்தும்.

கடத்தல், ஆயுதம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக விடுதலைப்புலிகள் தமிழகத்தில்ஊடுருவுகின்றனர். இதில் தமிழர்களையும் இணைத்து செயல்பட விரும்புகின்றனர்.

விடுதலைப் புலிகள் என்பவர்கள் டெரரிஸ்ட்! இவர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசியலும்இந்திய அரசியலும் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றால், அங்கே எப்படி கொலைகளில் ஈடுபடுகின்றனர்களோ அதே மாதிரிஇங்கேயும் செயல்பட தயங்கமாட்டார்கள் என்பதே உண்மை.

தமிழகத்தில் சாதரணமாக ஊடுருவி, பல முறை தப்பியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு,பத்மனாபா கொலையாளிகள் தப்பியது உட்பட பல சம்பவங்களைச் சொல்லலாம்.

தமிழகத்திலேயே, இப்பொழுதும் பல இடங்களில் ஊடுருவல் நடக்கிறது. தமிழகத்தில் சிலபகுதிகளில் மக்கள் குடியிருப்பதற்கே பயப்படுகிற சூழ்நிலை இருக்கிறது.

இந்திரா காந்தி இருந்திருந்தால், இலங்கைப் பிரச்சனை அன்றே தீர்ந்திருக்கும் என்றுபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் சொல்லியிருக்கிறாரே? என்றோம்.

காலம் கடந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள். அன்று, இந்திராகாந்தி இலங்கைப் பிரச்சனைமீது எடுத்த நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள பல அரசியல் வாதிகள் முழுமையானஅதற்குண்டான உண்மையான மரியாதையோடு ஏற்கவில்லை. தங்களுடைய அரசியல்ஆதாயததுக்காக எதிர் பிரச்சாரம் செய்தார்கள். இப்பொழுது அதை உணர்ந்து நினைத்துப்பார்க்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி!

தமிழர்களின் உணர்வுகளை இந்திரா காந்தி மதித்தார். தமிழ்நாடோ. இந்தியவோஇலங்கையில் போராடுபவர்களுக்கு நிலைகளனாக இருந்துவிடக்கூடாது என்பதில்உறுதியாக இருந்தார்.

தனிஈழம் - பற்றி தங்கள் கருத்து என்ன?

இல்லாத ஒன்றைப்பபற்றி எப்படி கருத்து சொல்ல முடியும்.

மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைய முயற்சிப்பேன்என்றிருக்கிறாரே சுப்ரமணியசுவாமி!

அவருக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறீர்கள். திராவிட கழகங்களுடன்கூட்டணி வைத்து காமராஜர் ஆட்சி எப்படி அமைக்க முடியும் என்கிறீர்கள்?

காமராஜர் ஆட்சி என்பது, ஏழை, எளியவர்களின் நலன் காக்கின்ற ஆட்சி.ஜாதியால்.மதத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குஉழைப்பாளர்களுக்கு, விவசாயிகளுக்கு உதவுகிற ஆட்சி.

பணம், மதம், ஜாதி, இந்த மூன்றின் அடிப்படையில் மக்கள் மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள்களை ஒழித்துக் கட்டுகின்ற ஆட்சி,சமத்துவ ஜனநாயக ஆட்சி நடத்தியவர்தான்காமராஜர்.

இது போன்ற நடு ஆட்சியை தேசீய இயக்கங்கள் தனியாகவும், கூட்டணி சேர்த்தும் தரமுடியும்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அ.தி.மு.க.வுடன் சேர்ந்து காமராஜர் ஆட்சிஅமைக்க முடியுமா?

தமிழகத்தில்,ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத திராவிட கட்சிகளே கிடையாது.ஜனநாயகத்தில் பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது தவிர்க்க முடியாதது.

அ.தி.மு.க. அல்லது தி.மு.க. -இந்த இரு கடசிகள்தான் கடந்த 33 ஆண்டுகளாகதமிழகத்தை ஆண்டு வந்திருக்கின்றது. இதற்கு மாற்று அணி அமைக்க காங்கிரஸ்கட்சி முயற்சிக்குமா? தேர்தலை தனித்து திராவிட கட்சிகள் நீங்கலாக கூட்டணிஅமைத்து செயல்படுமா?

இதுவரையில் அப்படி தேர்தலை சந்திக்கவிலலை. சில நிதர்சனமான உண்மையின்அடிப்படையின் அடிப்படையில் எதிர்காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி எப்படியிருக்கிறது. கோஷ்டி பூசல்கள்?

நன்றாக இருக்கிறது. ஏழுமாத காலமாக, தமிழகத்தின் மிகப் பெரிய பத்திரிக்கைமுதலாளிகள், தொலைக்காட்சி முதலாளிகள் சேர்ந்து. தலைமை மாற்றம் தலைவர் மாற்றம்என்று சொல்லி, இடைவிடாத செய்தி பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருபத்திரிக்கையும், தொலைக்காட்சியும் எவ்வளவு கோடி ரூபாய் சொத்துடையது,வருமானமுடையது.

இவைகளை எதிர்த்து ஏழை காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இருந்தும் இன்று வலிமையுடனும், நல்ல வளர்ச்சியுடனும் தான் இருக்கிறது என்றார்திண்டிவனம் ராமமூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X