தமிழகத்தில் இன்று
புவனேஸ்வர்:
கிராமப் பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு தேடி நகர்ப்புறங்களுக்கு இளைஞர்கள் அதிகம் செல்வதைத் தடுக்ககிராமப் பகுதியிலேயே அவர்களுக் அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஎன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சுந்தர்லால் பட்வா தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
வேலை வாய்ப்பு தேடி கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் நகர்ப் பகுதிகளுக்குச்செல்கின்றனர். இதனால், நகர்ப் பகுதியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரிக்கிறது. நகர்ப் புறங்களிலும் கிராமப்புற இளைஞர்களுக்குச் சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆகவே, கிராமப் புற இளைஞர்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. கிராமப்பகுதிகளிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அதனுடன் கிராமப்புற மேம்பாட்டையும் மேற்கொள்ளமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 4-ல் 3 பங்கினர் கிராமப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். அவர்களின்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.அத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையும், அதிக கவனும் செலுத்தும்படியும் அவர் கூறியுள்ளார்.
கிராமப் பகுதிகளுக்கும், நகர்ப் புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க பல திட்டங்களைமத்திய அரசு தீட்டியுள்ளது. இதற்காகவே, பட்ஜெட்டில் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும், கிராமப் பகுதி மேம்பாட்டுக்கும் இந்த நிதி செலவிடப்படும்.கிராமப் புறங்களிலேயே இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திட்டத்துடன், கிராமப்பகுதி மேம்பாட்டுக்காக குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, தகவல் தொடர்பு வசதி, வீட்டு வசதி, கல்விவசதி, மின் வசதி போன்றவை செய்து தரப்படும்.
கிராமப் பகுதி இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால், அதன்பிறகு அவர்கள் நகர்ப் புறங்களை நோக்கி செல்வதைத் தடுக்க முடியும். இதை இலக்காகக் கொண்டு தான் மத்தியஅரசு திட்டங்களை வகுத்துள்ளது என்றார் பட்வா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications