தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாகிஸ்தானுடன் இப்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லை: வாஜ்பாய்
டெல்லி:
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதற்கான சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை என்று பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகுசெய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை இப்போதுஇல்லை. எனவே இப்போதைக்கு இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள்இல்லை.
யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ள 30,000 ராணுவ வீரர்களை மீட்பது குறித்து இலங்கை அரசிடமிருந்து இதுவரைமுறையான கோரிக்கை ஏதும் வரவில்லை. வந்தால் பார்ப்போம் என்றார் பிரதமர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications