தமிழகத்தில் இன்று
க-லர் டிவி ஊழல் வழக்-கில் தீர்ப்-பு: தமி-ழ-கம் மு-ழு-வ-தும் -அ-தி-மு-க-வி-னர் கை-து
சென்னை:
ஜெய-ல-லி-தா மீதா-ன கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாயக்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அசம்பாவிதச் சம்பவம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மாநி-லம் மு--ழு-வ--தும் -அ-தி-மு-க-வி--னர் கை-து செய்-யப்-பட்-டு வ-ரு-கின்-ற-னர்.
அண்மையில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனைஅளிக்கப்பட்டதையடுத்து தர்மபுரியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியைச்சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரோடு பஸ்-சில் வைத்-து எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
இதே போல் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை வழங்கப்படுகிற-து. தீர்ப்பு ஜெய-ல-லி-தா-வு-க்-குஎ-தி-ரா-ன-தா-க இ-ருந்-தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்-க-லாம் என தமி-ழ-க அர-சு அஞ்-சு-கி-ற-து. இதை-ய--டுத்-துமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள்வாங்கியது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரூ 10.45 கோடி ஊழல்நடந்திருப்பதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதா, முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதி, உள்பட 10 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.
திமுக அரசு ஜெயலலிதா மீதும், அவரது கடந்த 1996 ம் ஆண்டு முதல்வராக இருந்த போதும் கலர் டிவி ஊழல்வழக்கு உள்பட இதுவரை 46 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
தற்போது இந்த வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளின்தீர்ப்பு 20001 ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த வழக்கை இரண்டாவது தனிநீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விசாரணைமுடிந்து, வக்கீல்கள் வாதம் முடிந்தபின் இறுதித் தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா, செல்வகணபதி உள்பட 10 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
தீர்ப்பைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடாதவாறு நீதிமன்றம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
அ-தி-மு-க கண்-ட-னம்:
நாளைய தீர்ப்பை இன்றே தெரிந்து கொண்டது போல் போலீசாரை ஏவி அதிமுகவினரை கைது செய்ய முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார் என்று அதி-முக அவைத் தலைவர் காளிமுத்து கண்டனம் தெ-ரிவித்துள்ளார்.
கலர் டிவி ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம்மு-ழு----வ-தும் மு-ன்ன்னெச்ச-ரிக்கை -நடவடிக்கையாக அதி-முகவினர் கைது செய்யப்படுவதாக தெ-ரிகிறது.
இதை கண்டித்து அதிமுக அவைத் தலைவர் காளித்து அறிக்கை வெளியிட்டார். அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் அதி-முகவினரை அழைத்து எச்ச-ரித்து, மிரட்டும்படி போலீஸ் அதிகா--ரி--களுக்கு -முதல்வர் கருணா-நிதிஉத்தரவிட்டுள்ளதாக தெ-ரிகிறது. -நாளை 30ம் தேதி நீதிமன்றத் தீர்ப்பை இன்றே எழுதி விட்டதுபோல் போலீசாருக்கு -முதல்வர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று முதல்வர் -முடிவு செய்து, நீதித்துறையை களங்கப்படுத்த -முயல்வது அதிகாரத்துஷ்பிரயோகமே. வாங்கப்பட்ட தீர்ப்பு, வழங்கப்பட்ட தீர்ப்பு என்று வக்கணை பேசும் கருணாநிதி, இப்போது தாம் எதிர்பார்க்கும்தீர்ப்பை -முன்கூட்டியே எழுதி விட்டாரா?
அறம் வெல்லும், கருணாநிதி தோற்பார் என்று இனிக்கும் தீர்ப்பை எதிர்பார்க்கும் அதி-முகவினரை அழைத்து அமைதி காக்கும்படிபோலீசார் அச்சுறுத்துவது ஏன்? இரவோடு இரவாக அதி-முகவினர் கைது செய்யப்படுவதற்கு கருணா-நிதியே காரணம்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கைது நடவடிக்கை துவங்கி விட்டது. -நாட்டு மக்கள் மத்தியில் -நம்பிக்கை இழந்து-நிற்கும் கருணா-நிதி, -நிலை குலைந்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது. கலவரவங்கள் -நடத்தி மக்களை திசை திருப்பிஆட்சியில் நீடிக்க கருணா-நிதி அக்கிரமங்களை மக்கள் பு-ரிந்து கொண்டுள்ளனர்.
நாளைய தீர்ப்பை இன்றே தெரிந்து கொண்டதுபோல் போலீசாரை ஏவி அதி-முகவினரை கைது செய்வது கருணா-நிதி தான்.கருணா-நிதி இயக்கும் வஞ்சக -நாடகம் -முடிவுக்கு வந்து விட்டது. தவறுகள் மலிந்த தடுமாற்ற ஆட்சிக்கு மக்கள் -முடிவு கட்டத்தயாராகி விட்டனர்.
ஊழல் குட்டையில் மாளிகை கட்டி மகிழும் கருணாநிதி குடும்பம் கம்பி எண்ணும் காலம் நெருங்கி வருகிறது. வரம்பு மீறியஅ-நாக-ரீக -நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடும் கருணா-நிதிக்கு பதில் சொல்லும் காலம் -நருங்கி விட்டது என்று கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications