தமிழகத்தில் இன்று
ஜெ. மீதான கலர் டி.வி. வழக்கில் இன்று தீர்ப்-பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெய-ல-லி-தா மீதா-ன கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாயக்கிழமை இறுதித் தீர்ப்புவழங்கப்படுகிறது.
அண்மையில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனைஅளிக்கப்பட்டதையடுத்து தர்மபுரியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியைச்சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரோடு பஸ்-சில் வைத்-து எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
இதே போல் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை வழங்கப்படுகிற-து. தீர்ப்பு ஜெய-ல-லி-தா-வு-க்-குஎ-தி-ரா-ன-தா-க இ-ருந்-தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்-க-லாம் என தமி-ழ-க அர-சு அஞ்-சு-கி-ற-து. இதை-ய--டுத்-துமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள்வாங்கியது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரூ 10.45 கோடி ஊழல்நடந்திருப்பதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதா, முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதி, உள்பட 10 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.
திமுக அரசு ஜெயலலிதா மீதும், அவரது கடந்த 1996 ம் ஆண்டு முதல்வராக இருந்த போதும் கலர் டிவி ஊழல்வழக்கு உள்பட இதுவரை 46 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
தற்போது இந்த வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளின்தீர்ப்பு 2001 ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த வழக்கை இரண்டாவது தனிநீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விசாரணைமுடிந்து, வக்கீல்கள் வாதம் முடிந்தபின் இறுதித் தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா, செல்வகணபதி உள்பட 10 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
தீர்ப்பைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடாதவாறு நீதிமன்றம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
-
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications