தமிழகத்தில் இன்று
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் - கருணாநிதி
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.
பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வழங்கியதில் ரூ.10 கோடிக்கும் அதிமாக ஊழல் நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்செல்வகணபதி, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் உள்ளிட்ட 10 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ் வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். செல்வகணபதி உள்படமற்றவர்களுக்குத் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது குறித்து முதல்வர் கருணாநிதியின் கருத்து:
கலர் டிவி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்படும்.
ஏற்கெனவே, நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.மேல்முறையீட்டின்பேரில், நிலக்கரி ஊழல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. மேலும், அவ் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக மீண்டும்சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications