Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
மொழிப் பாடங்-க-ளில் மாண-வி--கள் மு-த-லி-டம்
சென்னை:

ப்ளஸ் டூ தேர்வில் பல பாடங்களில் மாணவர்களை விட மாணவிகளே முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம்,பிரெஞ்சு ஆகிய மொழிப் பாடங்களில் மாணவிகளே முதலிடம் பெற்றுள்ளனர்.

மேல்நிலைத் தேர்வு முடிவுகளில் பெற்ற மாணவ மாணவிகள் விவரம் வருமாறு:

தமிழ்: கைலாசபுரம் பெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கலைவாணி என்பவர் 200 க்கு 195 மதிப்பெண் பெற்று முதலிடம்பெற்றுள்ளார். அதே பள்ளியை சேர்ந்த ஹேமா என்ற மாணவி 194 மதிப்பெண் பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி 194 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்தி: சென்னை மேற்கு சிஐடி நகர் ஆல்பா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கே.ஜி.ரஞ்சனி 195 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சென்னைமடிப்பாக்கம் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கார்த்திக் 194 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சென்னை கோபாலபுரம் டிஏவிமெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி பிருந்தா 193 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.

ஆங்கிலம்: வேலூர் சத்துவாச்சாரி எச்சிஎம்எச்எஸ்எஸ் பள்ளி மாணவி பாலாம்பிகை 194 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். சென்னை கோபாலபுரம்டிஏவி பள்ளி மாணவி மீரா 192 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும் பெற்றுள்ளனர்.

மலையாளம்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்ட் மாணவி திவ்யா 193 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.இம்மாவட்டத்தை சேர்ந்த அருமனை மேல்நிலைப்பள்ளி மாணவி சரிதா 191 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும், மேல்பாளை செயின்ட் மேரிஸ் பள்ளிமாணவி அனுஜா 191 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.

தெலுங்கு: சென்னை உள்ளகரம் நியூபிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஹரிபிரியா ஹோமந்தூரி 184 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சென்னைபூக்கடை எஸ்கேபிடி பள்ளி மாணவர் பாஸ்கர் 182 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும் பெற்றுள்ளனர்.

சமஸ்கிருதம்: சென்னை டிஏவி பள்ளி மாணவி வைஷ்ணவி, ஈரோடு திண்டல் பிவிபி பள்ளி மாணவி செளமியா, அதே பள்ளியைச் சேர்ந்த மதுசூதனன் ஆகியோர்200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பிரெஞ்சு: உடுமலைப்பேட்டை ஆர்ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கார்த்தியாயினி 198 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். சென்னை அண்ணாநகர்எஸ்பிஓஏ பள்ளி மாணவி தீபிகா 198 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும், சென்னை வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் நளின் பிரதீப் 198மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.

வேதியியல்: சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவர் வித்யாசாகர் 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். உடுமலைப்பேட்டை சீனிவாசாவித்யாலயா பள்ளி மாணவர் ஸ்ரீசக்தி 200 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், சென்னை டிஏவி பள்ளி மாணவர் யோகேஸ்குமார் 200 மதிப்பெண்பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.

இயற்பியல்:சென்னை டிஏவி பள்ளி மாணவர் வித்யாசாகர் 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். உடுமலைப்பேட்டை சீனிவாசர் பள்ளி மாணவிஸ்ரீசக்தி 200 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும் டிஏவி பள்ளி மாணவர் யோகேஸ்குமார் 200 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.இவர்கள் மூவரும் வேதியியல் பாடத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+