தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
நடிகரின் கார் மோதி காயமடைந்த போலீஸ்காரர் சாவு

சென்னை:

குடிபோதையில் நடிகர் ஆனந்த் ஓட்டி வந்த கார் மோதி காயமடைந்த போலீஸ்காரர் மரணமடைந்தார். இதையடுத்து நடிகர் ஆனந்த் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஆனந்த். இவர் கடந்த சனிக்கிழமை இரவு நல்ல குடிபோதையில் காரை ஓட்டி வந்தார்.அவருடன் காரில் பூர்ணிமா என்ற துணை நடிகையும் இருந்தார்.

அப்போது நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நடிகர் ஆனந்த் காரையும்வழிமறித்தனர். ஆனால், போலீசார் தடுத்தும் நிறுத்தாமல், தடுத்த போலீசார் மீது காரை மோத செய்து விட்டு பறந்து விட்டார் ஆனந்த்.

இந்த சம்பவத்தில் ராமச்சந்திரன் என்ற போலீஸ்காரர் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அரசு பொதுமருத்துவமனையில்சேர்த்தனர். பின்னர் கார் நம்பரை வைத்து நடிகர் ஆனந்தை கைது செய்தனர். அவரை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது சினிமா ஸ்டன்ட்நடிகர்கள் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ஆனந்தை மீட்டுச் சென்று விட்டனர்.

இதையடுத்து மறுநாள் காலையில் கமிஷனர் காளித்து உத்தரவின் பேரில் ஆனந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் தலையில் காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரர் ராமச்சந்திரன் செவ்வாய்க் கிழமை காலையில் மரணம்அடைந்தார். இவர் செஞ்சியை சேர்ந்தவர். 40 வயதான இவரது மனைவி சரஸ்வதி. 7 வயதில் யோகராஜ் என்ற மகன் உள்ளான்.

போலீஸ்காரர் மரணமடைந்ததை அடுத்து நடிகர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+