தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
ஜெ. ஆ-ட்-சி -ஊ-ழல்களும்..-.--தா-ட-ரும் வழக்-கு-க-ளும்

ஆட்சிக்கு வந்த கையோடு அதிமுக ஆட்சி கால ஊழல்களை விசாரிப்பதற்காகவே சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி.

இதற்கு 3 சிறப்பு நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். ஜெயலலிதா மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. (கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டேஹோட்டல், நிலக்கரி, டான்சி, கலர் டிவி, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தது ஆகிய வழக்குகள்)

கடந்த 4 வருடங்களாக இந்த வழக்கு விசாரணைகள் ஜெயலலிதாவையும் அவரது உயிர்த் தோழி சசிகலாவையும் விரட்டி வருகின்றன. ஆனால்,அவ்வப்போது ஜெயலலிதாவுக்கு சாதகமான தீர்ப்புகளும் வெளியாகி அவருக்கு கொஞ்சம் மூச்சுவிடவும் அவகாசம் கிடைத்துத் தான் வருகிறது.

நிலக்கரி ஊழல் வழக்கில் அவருக்கு விடுதலை கொடுத்தது சிறப்பு நீதிமன்றம். இப்போது கலர் டிவி வழக்கிலும் விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால்,நிலக்கரி வழக்கில் எப்படி மேல் முறையீடு செய்து ஜெயலலிதாவை மீண்டும் மடக்கினார் கருணாநிதி. இப்போது கலர் டிவி வழக்கிலும் தமிழக அரசுசார்பில் மேல் முறையீடு செய்ய நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+