தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
இந்திய பட்டுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.1501.78 கோடி மதிப்புள்ள பட்டு அமெரிக்காவுக்குஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இந்திய பட்டு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர் ஜேக்கப் சாமுவேல் கூறியதாவது:
இந்திய பட்டுக்கு அமெரிக்காவில் பெரும் டிமாண்ட் உள்ளது. 1999-2000-ம் ஆண்டில் மட்டும் ரூ.1501.78 கோடி மதிப்புள்ள பட்டுஅமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 20.1 சதவீதம் அதிகமாகும்.
இதன்மூலம், இந்திய பட்டுக்கு ஒரு சிறந்த மார்க்கெட்டாக அமெரிக்கா விளங்குகிறது. இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான பட்டுஏற்றுமதியும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜெர்மனிக்குத்தான் இந்தியாவிலிருந்து அதிக பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.177.35 கோடிமதிப்புள்ள பட்டு ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றார் சாமுவேல்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications