தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மகள் திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த 40 பவுன் நகை கொள்ளை

சென்னை:

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் மகள் திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த 40சவரன் நகைகளும், ஒரு லட்ச ரூபாய் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டன.

இதனால் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவேண்டிய அவரது மகளின்திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது.

கனரா வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜாராமன். இவர்சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம்நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளது.

நிச்சயதார்த்த வேலைகளை ராஜா ராமன் கவனித்து வந்தார். மகளின் திருமணத்திற்காக40 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் வீட்டில் தயாராக வைத்திருந்தார். இரண்டுநாட்களுக்கு முன்பு நிச்சயத்தார்த்த நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அப்போது வீட்டு பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்துநகையையும், பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+