தமிழகத்தில் இன்று
ஆண்டுக்கு ஒரு மாடல் அ-றி-மு-கப்-ப-டுத்-த மாரு-தி நி-று-வ-னம் மு-டி-வு
புனே:
நடப்பு நிதி ஆண்டில் மூன்று புதிய மாடல்களில் கார்கள் தயாரிக்க மாருதி உத்யோக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு புதிய மாடல்கார் தயாரிக்கவும் அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜகதீஷ் கட்டார் கூறியதாவது:
மாருதி உத்யோக் நிறுவனம் பல வகைகளில் கார்களைத் தயாரித்து வருகிறது. மாருதி வகைக் கார்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.ஆகவே, நடப்பு நிதி ஆண்டில் 3 புதிய மாடல்களில் கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் மாடல் கார் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் புதிய மாடல் கார் அறிமுகப்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள 3 மாடல்களில் ஒன்று பெரிய வகைக் காராகும். மற்ற இரண்டில் ஒன்று சிறிய வகையையும் மற்றொன்று நடுத்தரவகையையும் சேர்ந்தது.
மாருதி நிறுவனம் தனது டீலர்கள் மற்றும் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது நாட்டில் 178 டீலர்கள் உள்ளனர்.இந்த ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கை 210 ஆக உய்ர்த்தப்படும். அதே போல், தற்போதுள்ள பணிமனைகளின் எண்ணிக்கை 1500-லிருந்து 2,250-ஆகஉயர்த்தப்படும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு பணிமனையை வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-சண்டிகர் நெடுஞ்சாலைகளில் இத்தகைய பணி மனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும். அது தவிர,மைசூர்-பெங்களூர், டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலைகளிலும் இத்தகைய பணி மனைகள் விரைவில் அமைக்கப்படும் என்றார் கட்டார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications