தமிழகத்தில் இன்று
கோவையில் சர்வதேச வர்த்-த-க கருத்தரங்கு
கோவை:
கோவையில் சர்வதேச வர்த்தக ஒப்பந்த கருத்தரங்கு (சிமா) நடந்தது.
அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஏற்படும் சர்வதேச அளவிலான சந்தைப் போட்டியை சந்திக்க டெக்ஸ்டைல் மில்கள் தயாராக வேண்டும் என முன்னாள்மத்திய வருவாய்த் துறை அதிகாரி லட்சுமிகுமரன் அறிவுரை கூறியுள்ளார்.
கோவையில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சிமா) சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கருத்தரங்கை நடத்தியது. இதில் கலந்து கொண்டு முன்னாள் மத்தியவருவாய்த் துறை அதிகாரியும், தற்போது உச்சநீதிமன்றத்தில் ஆலோசகருமான லட்சுமிகுமரன் பேசியதாவது:
சர்வதேச வர்த்தகம், தாராளமயமாக்கல் போன்ற அம்சங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் அமலுக்கு வந்து விடும். இந்த சர்வதேச வர்த்தகத்தால் உலகம்முழுவதும் ஏற்றுமதி இறக்குமதி தாராளமயமாகும். எனவே அனைத்து பொருட்களையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவருகிறது.
இதனால் ஏற்படும் சவால்களைச் சந்திக்க நாம் தயாராக வேண்டும். இந்தியாவில் தாராளமான மனிதசக்தி கிடைப்பதால் குறைந்த கூலியில் அதிகபொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால், சீனா, தென்கொரியா, தைவான் போன்ற நாடுகள் தரமான ஜவுளிகளை உற்பத்தி செய்கின்றன. எனவே சர்வதேச தரத்தில் நமது உற்பத்தியைமாற்றி அமைக்க வேண்டும். மில்கள் எதிர்வரும் தரநிர்ணய சவால்களைச் சந்திக்க இப்போதே தயாராக வேண்டும்.
அமெரிக்காவிற்கு இந்திய துணிகளின் ஏற்றுமதி தற்போது 3 சதவீத அளவிற்கு மட்டுமே உள்ளது. இந்த இனி வரும் ஆண்டுகளில் கணிசமான அளவிற்குஉயர வாய்ப்பு உள்ளது. 2005ம் ஆண்டில் ஏற்றுமதி இறக்குமதி வரிகள் நீக்கப்படும் போது இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
இவ்வாறு லட்சுமிகுமரன் பேசினார்.
மில்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் பற்றி தென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் மாணிக்கம் ராமசாமி பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications