தமிழகத்தில் இன்று
கோவையில் ரூ.50 கோடியில் வர்த்தகக் கண்காட்சி மையம்
பெங்களூர்:
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றும், தமிழகத்தின் தொழில் நகரம் என்றும் அழைக்கப்படும்கோயம்புத்தூரில், ரூ.50 கோடி செலவில் நிரந்தர வர்த்தகக் கண்காட்சி மையம் கட்டப்படவுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தைச் சேர்ந்த வி. ஜகன்னாதன் கூறியதாவது:
கோவை நகரம் சிறந்த தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு பல தொழிற் கண்காட்சிகள்நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட இரு சர்வதேச தொழிற் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
கோவை நகருக்குக் கிடைத்துள்ள இச் சிறப்பை அடுத்து அங்கு நிரந்தரமாக தொழிற் கண்காட்சி மையம் அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.50 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப்படும்.கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம் சார்பில் இந்த மையம் கட்டப்படும்.
தற்போது நிரந்தர வர்த்தகக் கண்காட்சி மையம் கட்டப்படவுள்ள கண்காட்சித் திடலில் வரும் ஆகஸ்ட் மாதம்விவசாயக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஃபவுண்டரி பொருட்கள் குறித்தகண்காட்சி நடைபெற உள்ளது.
நிரந்தர வர்த்தகக் கண்காட்சி மையத்தில் நிரந்தர திடல்கள் அமைப்பது தொடர்பாக, வெளிநாட்டுநிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இம் மையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்காட்சிநடத்துவது தொடர்பாக ஜெர்மனி கண்காட்சி அதிகாரிகளுடன் பேச்சு நடைபெறுகிறது.
5 ஆண்டுகளில் இந்த நிரந்தர வர்த்தகக் கண்காட்சி மையம் கட்டப்படும். முதல் கட்டமாக 1.35 லட்சம் சதுர அடிபரப்பில் கட்டடம் கட்டப்படும். 5-ம் ஆண்டு முடிவில் மொத்தம் 4 லட்சம் சதுர அடி பரப்பளவுள்ள கட்டடம்கட்டப்படும். முதல் கட்டத்துக்கு ரூ.12 கோடி செலவிடப்படும்.
ஆகஸ்டில் நடைபெற உள்ள விவசாயக் கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து 400 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன விவசாயத்துக்குத் தேவையான வசதி வாய்ப்புகளைமையப்படுத்தி இக் கண்காட்சி நடத்த்பபடும். இந்தியா தவிர அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், ஸ்வீடன், ஹாலந்து,டென்மார்க், ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். என்றார் ஜகன்னாதன்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications