தமிழகத்தில் இன்று
திருமலையில் மினி பிருந்தாவன் அமைக்க ஆந்திர அரசு திட்டம்
திருப்பதி:
திருப்பதி, திருமலை மலையடிவாரத்தில் உள்ள கல்யாணி அணைப் பகுதியில் பிருந்தாவன் கார்டன் போன்ற தோட்டம் அமைக்க ஆந்திர மாநில சுற்றுலாவளர்ச்சிக் கழகம் முடிவு செய்துள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் ரூ. 400 கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக மினி பிருந்தாவன்அமைக்க சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் படி அணையின் இரு பக்கமும் தோட்டம் அமைக்கப்படும். ஏழு ஏக்கர் பரப்பளவில் இந்தத் தோட்டம் அமையும். ஆந்திர மாநிலசுற்றுலா வளர்ச்சிக் கழக டிவிஷனல் மேலாளர் சிவா ரெட்டி செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைஅதிகரிக்கும் பொருட்டு மினி பிருந்தாவன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருமலை, மலையின் மீது கல்யாண அணைக்கு எதிரே, 30 அறைகள் கொண்ட காட்டேஜ் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3 கோடிசெலவிடப்படும். இந்த இடத்தில் இரண்டு நீச்சல் குளங்கள் கட்டவும் திட்டம் உள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் சென்னை-திருப்பதி-பெங்களூர் மார்க்கத்தில் சொகுசுப் பேருந்துகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கத் துவங்கியுள்ளதுஎன்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications