தமிழகத்தில் இன்று
மகேந்திர செளத்ரி திங்கள்கிழமைக்குள் விடுதலை: ஜார்ஜ் ஸ்பீட் அறிவிப்பு
சுவா:
பிஜியின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் உரிமையை பிஜி பழங்குடி தலைவர்களிடம் ஒப்படைக்க பிஜி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும்ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
மே 19-ம் தேதி பிஜித் தீவில் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள், மகேந்திர பால் செளத்ரியின் ஆட்சியைக் கவிழ்த்ததன் மூலம் ஏற்பட்டகுழப்பத்திற்கு இதன் மூலம் முடிவுக்கு வரவுள்ளது.
ஸ்பீட் ஆட்சியைக் கவிழ்த்த சில நாட்களில் தலைநகர் சுவாவில் வன்முறை மூண்டது. இதையடுத்து அதிபர் மாரா ராஜினாமா செய்து விட்டுதலைமறைவானார். ராணுவத் தளபதி ஆட்சியைப் பிடித்தார். இடைக்கால பிரதமரையும் அவர் அறிவித்தார். ஆனால் அவரை ஏற்க ஜார்ஜ் ஸ்பீட்மறுத்தார். தானே ஆட்சியில் நீடிப்பேன் என்றும் அறிவித்தார். இதனால் குழப்பம் நீடித்தது. இதையடுத்து இடைக்கால பிரதமரை ராணுவத் தளபதி வாபஸ்பெற்றார். அவருக்கும், ஸ்பீடுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த நிலையில், இப்பிரச்சினைக்கு பழங்குடித் தலைவர்கள் அடங்கிய பிஜிக் கவுன்சில் முடிவு காண, புரட்சிக்காரர்களும், ராணுவத் தலைமையும் ஒத்துக்கொண்டுள்ளனர். இதையடுத்து திங்கள்கிழமைக்குள் புரட்சிக்காரர்களின் பிடியில் உள்ள மகேந்தரி செளத்ரி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்என்று தெரிகிறது.
வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் பைனமராமா இருவரும் காவா என்ற மிதமான போதை கொண்டபானத்தை அவர்கள் சேர்ந்து அருந்தினர். பிஜித் தீவில் இந்தப் போதைப் பொருள் பானம் மிகவும் பிரசித்தமானது.
பின்னர் ஜார்ஜ் ஸ்பீட் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழங்குடித் தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு, பிஜித் தீவு பிரச்சினைக்கு முடிவு காணப்படும். அதற்கு முன்பினைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர். திங்கள்கிழமை பழங்குடித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். அதற்குள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிடுவர்.
அனைத்துப் பிரச்சினைக்கும் விரைவில் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பிரச்சினைகள் அனைத்தும்தீர்ந்து விடும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications