தமிழகத்தில் இன்று
மகனை 30 ஆண்டுகள் வீட்டுக்குள் சிறை வைத்த தாய்
மாட்ரிக்: (ஸ்பெயின்)
மனநிலை பாதிக்கப்பட்ட தன் மகனை தான் வசித்து வந்த குக்கிராமத்தில் வீட்டுக்குள் 30 வருடமாகப் பூட்டி வைத்திருந்த தாய் குறித்து இந்த வாரத்தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்பெயின் நாட்டு டெய்லி எல் பாஸ் என்ற பத்திரிக்கைச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் பகுதியில் ரூபியேலா கிராமத்தில் வசித்து வந்த 92 வயது பெண்ணின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் அவரைஎத்தனையோ மருத்துவமனைகளில் காட்டியும் அவர் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த அந்தத் தாய் வேறு எங்கும் தனியாகச் சென்றால் பிரச்சனைகள் வந்து விடும் என்ற காரணத்தால் 7 சதுர அடி பரப்பளவுள்ளதனது வீட்டிலேயே சிறைவைத்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட அந்த மகன் பூட்டிய வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
அந்தத் தாய் தன் மகனுக்கு பூட்டிய அறையிலுள்ள ஜன்னல் வழியே உணவும், நீரும் வழங்கி வருவார் என்றும் அந்தப் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது.
இதுகுறித்து அந்தத் தாய் கூறுகையில், எனக்கு ஒரே மகன். அவனும் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லை.எனக்கு ஆதரவு யாருமில்லை. அதனால் தான் என் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து விட்டேன் என்றார்.
தற்போது அவர் அங்குள்ள மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவரது நடவடிக்கையை மருத்துவர்கள் கூர்ந்துகவனித்து வருகிறார்கள் என்றும் டெய்லி எல் பாய்ஸ் செய்தி உறுதிப்படுத்துகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications