தமிழகத்தில் இன்று
ஐ.நா. தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்: ஜஸ்வந்த் சிங்
சிங்கப்பூர்:
இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. சபையின் தலையீட்டை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள அவர் அங்கு இலங்கைப் பிரச்சினை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஐ.நா. சபையின் பங்கு இந்தப் பிரச்சினையில்ஏதும் இல்லை. இலங்கை விவகாரத்தில் அந்த நாடு கேட்டுக் கொண்டால் மட்டுமே தலையிடுவோம்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது. எனவே இலங்கையில் எந்தப் பிளவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இந்தியாவின்கடமை ஆகும்.
நாங்களாக சென்று இலங்கைப் பிரச்சினையில் தலையிட மாட்டோம். கேட்டால் மட்டுமே பரிசீலிப்போம்.
பிஜிப் பிரச்சினையில் காமன்வெல்த் நாடுகள் தலையிட்டு தீர்வு ஏற்பட உதவ வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications