தமிழகத்தில் இன்று
பிஜி சென்றார் இந்தியப் பிரதிநிதி
டெல்லி:
பிஜித் தீவில் உள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக இந்தியப் பிரதிநிதிஎஸ்.டி.தேவாரே சனிக்கிழமை தலைநகர் சுவா சென்றடைந்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திர பால் செளத்ரி அரசு கவிழ்க்கப்பட்டபிறகு பிஜித் தீவில் நாளொரு குழப்பமும், பொழுதொரு ஆட்சிக் கவிழ்ப்பும் நடந்துவருகிறது.
புரட்சிக்காரர் ஜார்ஜ் ஸ்பீட் ஆட்சியைக் கவிழ்த்த சில நாட்களில் அதிபர் மாராராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. பிறகு சிலநாட்களில் புரட்சிக்காரர்களும், ராணுவத்தினரும் சேர்ந்து, இந்தப் பிரச்சினையைபழங்குடித் தலைவர்களிடம் விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தனர். தற்போதுஅதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிஜியில் உள்ள நிலைமை குறித்து நேரடியாக ஆராய்வதற்காக இந்தியவெளியுறவுத் துறை செயலாளர் தேவாரே, சுவா சென்றுள்ளார்.அவருடன்,ஆஸ்திரேலியா நாட்டுக்கான இந்தியத் தூதர் ரவீந்திரநாதனும் சென்றுள்ளார்.
இவர்களது பயணம் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரமீந்தர் சிங் ஜஸ்ஸால் கூறுகையில், பிஜியில் தற்போதைய நிலைமைகுறித்து விரிவாக ஆராயப்படும். சுவாவிலுள்ள இந்திய தூதர் செளஹானை, தேவாரேசந்திப்பார்.
இந்தியத் தூதரக அதிகாரிகள், பிஜியில் வாழும் இந்தியர்களையும் அவர் சந்திப்பார்.பிஜியில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் நலமுடன் உள்ளனர்.
பிஜிப் பயணத்தை முடித்துக் கொண்டு, தேவாரே, நியூசிலாந்து செல்லவுள்ளார். பிஜிநிலவரம் குறித்து நியூசிலாந்து அரசுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.
பிஜி அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக இப்போதைக்குத் திட்டமில்லைஎன்றார் ஜஸ்ஸால்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications