தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தலா 100 இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க எம்.பிக்களுக்கு கோரிக்கை

கொழும்பு:

ஒவ்வொரு எம்.பியும் தங்களது தொகுதியிலிருந்து குறைந்தது 100 இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து உதவ வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் அனிருத்தா ரத்வத்தே, இலங்கை ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் வசம் யாழ்ப்பாணம் வந்து விடக் கூடாது என்றுயாழ்ப்பாணம் மக்கள் விரும்புகின்றனர். எனவே, யாழ்ப்பாணத்திலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் அரசைக் கோரிவருகின்றனர்.

சமீபத்தில் 10,000 கையெழுத்திட்டுக் கொடுத்த கோரிக்கை மனு அரசுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்கள் மிகவும் தைரியத்துடனும், துணிவுடனும் உள்ளனர். புதிதாக வாங்கப்பட்ட நவீன ஆயுதங்கள் காரணமாகராணுவத்தினரிடையே புதிய தெம்பு வந்துள்ளது.

யாழ்ப்பாணம் வளைகுடாவில் விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட்டு வரும் ராணுவத்தினருக்குக் கூடுதல் பலம் கொடுக்கும் வகையில் ஏராளமானஇளைஞர்களை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

ராணுவத்திலிருந்து தப்பியவர்களில் பலர் மீண்டும் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆயுதங்கள் வாங்க அதிபர் சந்திரிகா ரூ. 24 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனஎன்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+