ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடமும் இந்தியா தோல்வி

Subscribe to Oneindia Tamil

டாக்கா:

பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. இதன் மூலம் இறுதிஆட்டத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா முற்றிலும் இழந்தது.

சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 285 எடுத்தது. கடைசி 3 ஓவரில்மட்டும் 40 ரன்களை அந்த அணி குவித்தது.

இந்திய அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்ததால் பாகிஸ்தான் அணியினர் அதிகரன்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணியின் யூசுப் யுகானா சிறப்பாக ஆடிசதமடித்தார். அவர் 112 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் 4 விக்கெட் இழப்புக்கு104 ரன்கள் என்ற நிலையில் இருந்தது பாகிஸ்தான். ஆனால், அடுத்து ஆட வந்தயுகானாவும், கேப்டன் மோயின் கானும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை நிலைநிறுத்தினர். மோயின் கான் 46 ரன்கள் எடுத்தார்.

கும்ப்ளே சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் குமரன் 10ஓவரில் 86 ரன்களும், அமித் பண்டாரி 10 ஓவரில் 75 ரன்களு விட்டுக் கொடுத்தனர்.குமரன் தனது கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்களை கொடுத்தார். அதனால், யுகானாவும்90 ரன்களில் இருந்து சதத்தை எட்டினார்.

50 ஓவரில் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதிபெறலாம் என்ற நிலையில் இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இந்தியவீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் வந்த வேகத்தில் அவுட்டாகி திரும்பிச் சென்றவண்ணம் இருந்தனர்.

இதனால், 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்தது.இதனால், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

ஜடேஜா மட்டும் நின்று ஆடி 103 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 4சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக டெண்டுல்கர்25 ரன்களும், திராவிட் 25 ரன்களும், ராபின் சிங் 21 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணியில் அப்துர் ரஸாக் சிறப்பாகப் பந்து வீசி 4 விக்கெட்டுகளைவீழ்த்தினார். ஆட்டத்தின் சிறந்த வீரராக யுகானா தேர்வு செய்யப்பட்டார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் அடுத்த ஆட்டம் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும்இடையே திங்கள்கிழமை நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் புதன்கிழமைநடைபெற உள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், திங்கள்கிழமைநடைபெறும் ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+