தமிழகத்தில் இன்று
ஜூ-ன்04, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
3. ஹஸ்தினாபுரம்
அத்தின புரமுண்டாம் - இவ்
அவனியி லேயதற் கிணையிலை யாம்
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்
முத்தொளிர் மாடங்க ளாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்
நத்தியல் வாவிக ளாம் - அங்கு
நாடு மிரிதிநகர் தேவிக ளாம் (7)
அந்தணர் வீதிக ளாம் - மறை
யாதிக ளாம்கலைச் சோதிகளாம்
செந்தழல் வேள்விக ளாம் - மிகச்
சீர்பெறுஞ் சாத்திரக் கேள்விக ளாம்,
மந்திர கீதங்க ளாம்;-தர்க்க
வாதங்க ளாம் நவ நீதங்களாம்
சிந்தையி லறமுண் டாம்- எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமு முண்டாம். (8)
மெய்த்தவர் பலருமுண்டாம் - வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம்
உய்த்திடு சிவஞானம் - கனித்
தேர்ந்திடு மேலவர் பலருண் டாம்
பொய்த் தவிந் திரசா லம் -நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யும்
கைத்திடு பொய்ம்மொழி யும் - கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம் (9)
மாலைகள் புரண்டசை யும் - பெரு
வரையெனத் திரணவன் தோளுடை யார்,
வேலையும் வாளினை யும் - நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,
காலையும் மாலையிலும் - பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சி கொள் வோர் - கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார் (10)
ஆரிய வேல்மறவர் - புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணரந் தோர்
சீரியல் மதிமுகத் தார் - மணித்
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்,
வேரியங் கள்ளுருத்தி -எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல் - வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவமே. (11)
நல்லிசை முழக்கங்க ளாம் - பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்
தொல்லிசைக் காவியங்கள் - அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங்கள் - கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்!
மல்லிசை போர்களுண்டாம் திரள்
வாய்ந்திவை பார்த்திடு வேர்களுண்டாம் (12)
எண்ணரு கனிவகை யும் - இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்
தண்ணணறுஞ் சாந்தங்க ளும் - மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
கண்ணமும் நறும்புகை யும் - சுரர்
துய்ப்பதற்கு குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகையும் - களி
யுவகையும் கேளியும் ஓங்கின வே. (13)
சிவனுடை நண்பன்என் பார் - வட
திசைசக்கதி பதியள கேசன் - என் பார்
அவனுடைப் பெருஞ்செல்வம் - இவர்
தரனுடைத் தொழில் செயும் மாசன மும்
எவனுடைத் தொழில் செயும் மாசனமும்
இருந்திடுந் தண்மையது எழில் நகரே.( 14)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications