தமிழகத்தில் இன்று
வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை (சென்சார்ஷிப்) நீக்கம்
கொழும்பு:
இலங்கையில் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை (சென்சார்ஷிப்)திங்கள்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால், இலங்கை உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கான தடை தொடரும் என்றுஇலங்கையின் பத்திரிக்கைத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா திங்கள்கிழமைஅறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் வெளிநாட்டுப்பத்திரிக்கைகளுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து அவைகள் மீது விதிக்கப்பட்டசென்சார்ஷிப் தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது.
இனிமேல், வெளிநாட்டுப் பத்திரிகைகள் தங்களது செய்திகளை வெளியிடும்முன்அவற்றை அரசு அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெறவேண்டிய தேவையில்லை. இனிஅவை தங்களது செய்திகளை நேரடியாக வெளியிட்டுக் கொள்ளலாம்.
தடை நீக்கப்பட்டதால், செய்திகளை நேரடியாக வெளியிட்டுக் கொள்ள அனுமதிகிடைத்தாலும், இலங்கையின் நலனில் அக்கறை கொண்டு பொறுப்புணர்வுடன்வெளிநாட்டுப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடும் என்று கருதுகிறேன்.
வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தங்கள் பத்திரிகைகளில்வெளியிட உள்ளூர் பத்திரிகைகள் விரும்பினால், அதுதொடர்பாக அரசிடம் அனுமதிபெறவேண்டும். ஆனால், அவற்றுக்கான தடையும் அடுத்த ஒரு மாதத்துக்குள் விலக்கிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் அமைச்சர் சமரவீரா.
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை துவங்கியதைஅடுத்து அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது, செய்திகளைவெளியிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications