இந்திய அணி விரைவில் புதுப் பொலிவு பெறும் - கங்குலி
டாக்கா:
இந்திய கிரிக்கெட் அணி விரைவில் புதுப் பொலிவு பெறும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்திய அணி கேப்டன் சவுரவ்கங்குலி தெரிவித்தார்.
ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா தோற்று வெளியேறிய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சரியாக விளையாட வில்லை. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாரும் சரியாகவிளையாடவில்லை. இலங்கையும், பாகிஸ்தானும் நன்றாக விளையாடி வெற்றி பெற்றன.
இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி தாற்காலிகமானதுதான். இந்திய அணியைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி மீண்டும்பல வெற்றிகள் பெறும் வகையில் புதுப் பொலிவு பெறும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குமரனும், பண்டாரியும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். பண்டாரிக்கு அது முதல் ஆட்டம். மேலும்,குமரனும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெற்றவர். அன்றைய தினம் பிட்ச் இருந்த நிலையை வைத்து அவர்களைக் குறை கூற முடியாது.பல சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு தொடக்கத்தில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும்.
இருவரும் இளைஞர்கள். கடுமையாக உழைத்தார்கள். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த பந்து வீச்சாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கைஎனக்குள்ளது.
ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முக்கியமான கட்டத்தில் அவுட்டானதுதான் தோல்விக்குக் காரணம். குறிப்பாகமத்திய நிலை வீரர்கள், அதிக அனுபவம் மிக்கவர்கள், எந்த பிட்சில் எப்படி விளையாடவேண்டும் என்று தெரிந்தவர்கள் சரியாக விளையாடவில்லைஎன்றார் கங்குலி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications