ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 3-வது வெற்றி
டாக்கா:
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது மூன்றாவதுவெற்றியைப் பெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை 7விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.
இரு அணிகளும் ஏற்கெனவே இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்று விட்ட நிலையில்,திங்கள்கிழமை இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்செய்தது.
ஆனால், எதிர்பார்ப்புக்கும் மிக மோசமாக விளையாடி 49 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. அட்டபட்டு மட்டும்ஓரளவு நின்று ஆடி 62 ரன்கள் எடுத்தார். உபுல் சந்தனா 46 ரன்களும், கேப்டன்ஜெயசூர்யா 28 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் அசார் மெகமூத் சிறப்பாகப் பந்து வீசி 24 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் பதற்றமில்லாமல் ஆடி 48.2 ஓவரில் 3 விக்கெட்டுகளைமட்டுமே இழந்து 193 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்த யூசுப் யுகானா, இந்த ஆட்டத்திலும்சிறப்பாக ஆடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குஅடுத்தபடியாக மொகம்மது வாஸிம் 44 ரன்கள் எடுத்தார். யூசுப் யுகான் சிறந்தஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணியில் சஜீவ டிசில்வா மட்டும்2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் தான் விளையாடியஅனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இலங்கை இரு ஆட்டங்களில் மட்டும்வெற்றி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தானும், இலங்கையும்மீண்டும் மோதுகின்றன.
இதுவரை 6 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்திருந்தாலும், ஒருமுறை கூடகோப்பையை பாகிஸ்தான் வெல்லவில்லை. ஆனால், இலங்கை இரு முறைகோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு கோப்பையை வென்று பாகிஸ்தான்சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications