தமிழகத்தில் இன்று
-பல்-கேரியா, ஸ்லோவேகியா செல்கிறார் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த்
டெல்லி:
துணை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஜி-15 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒரு வார சுற்றுப்பயணமாக பல்கேரியா மற்றும் ஸ்-லோ-வேகியாநாடுகளுக்குச் செல்கிறார்.
ஜூன் 17 முதல் 21 ம் தேதி வரை அவர் பல்கேரியா நாட்டில் இருப்பார். துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்துடன் அவரது மனைவி சுமன் காந்த், மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கின்றனர்.
கிருஷ்ணகாந்த் பல்கேரியாவில் அதிபர் பீட்டர் ஸ்டோயனவ், பிரதமர் இவான் கோஸ்டோவ் மற்றும் இதர அமைச்சர்களை சந்தித்துப் பேசுகிறார்.அவரது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் பல்கேரியா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளின் பொருளாதாரத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தைதொடர்புடையதாக இருக்கும் என்று அரசுத் தரப்பு செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
கிருஷ்ணகாந்த், பல்கேரியாவில் சோபியா பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், ஆகியவர்களைச் சந்தித்துப் பேசி விட்டு, வரலாறு மற்றும்கலாச்சார சிறப்பு மிக்க இடங்களையும் சுற்றிப் பார்ப்பார்.
பின்னர் ஜூன் 13 முதல் 16 வரை ஸ்லோவக்கியா நாட்டுக்குச் செல்லும் அவர் அங்கேயுள்ள அரசு உயர்அதிகாரிகளுடன் வர்த்தகம், வணிகம்,கலாச்சாரம், கல்வி ஆகியவற்றில் இருநாடுகளின் ஒருங்கிணைப்பு குறித்து விவாதிப்பார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications