தமிழகத்தில் இன்று
புரட்சிக்காரர்கள் கோரிக்கைக்கு பணிய மாட்டோம்: பிஜி ராணுவத் தளபதி
சுவா:
பிஜியில் பிரதமர் மகேந்திர பால் செளத்திரியையும், அவரது அமைச்சரவையில் உள்ள 30 பிணைக்கைதிகளையும் விடுவிப்பதற்காக புரட்சிக்காரர்களின்தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கூறும் எந்த கோரிக்கைக்கும் நாங்கள் அடிபணியமாட்டோம் என்று ராணுவத் தளபதி பிராங்க் பெய்னிமாராமா தெரிவித்தார்.
பிஜியில் புரட்சிக்காரர்கள் கடந்த மே 19 ம் தேதி பிரதமர் மகேந்திரபால் செளத்ரியையும், மேலும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களையும்பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர். இந்த நிலையில் புரட்சிக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கே ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
ராணுவத்திற்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் பிஜியில்இந்திய வம்சாவழி அரசை நீக்கி விட்டு, பிஜியிலுள்ள பழங்குடி இனமக்கள் கொண்ட இடைக்கால அரசை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜார்ஜ்ஸ்பீட் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் ராணுவத் தளபதி பிராங்க் பெய்னிமராமா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புரட்சிக்காரர்கள் நாளுக்குநாள் தங்களது கோரிக்கையைமாற்றி வருகிறார்கள். இனிமேல் அவர்கள் வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்றார்.
ஸ்பீட் ஆதரவு ராணுவத்தினருக்கு எச்சரிக்கை:
நாடாளுமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினரில் சிலர் புரட்சிக்காரர்களுக்கு ஆதரவாக மாறியிருந்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை8.30 மணிக்குள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து வெளியே வராவிட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும் என்று ராணுவத் தலைமை எச்சரிககைவிடுத்திருந்தது.
இருப்பினும் ஒரு அதிகாரி, இரண்டு பொறியாளர்கள் தவிர வேறு யாரும் வெளியே வரவில்லை. தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பீடுக்கு ஆதரவாக18 பேர் கொண்ட ராணுவப் படை உள்ளது. மற்ற ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்று ராணவச் செய்தித் தொடர்பாளர் தாராகினிகினிகூறியுள்ளார்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications