தமிழகத்தில் இன்று
தனி ஈழம்: "கருணாநிதி யோசனைக்கும் மத்திய அரசின் முடிவுக்கும் தொடர்பில்லை
சென்னை:
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ள யோசனைக்கும், இலங்கைைப் பிரச்சினையில் மத்தியஅரசு எடுத்துள்ள முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 3-ம் தேதி நடந்த தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐரோப்பிய குடியரசுநாடுகள் போல் இரண்டாகப் பிரித்துவிடலாம் என்ற யோசனையைத் தெரிவித்தார். இந்த யோசனை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக, ஜனா கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதி தெரிவித்த யோசனை அவரது சொந்த யோசனையாகும். அதற்கும், இலங்கைப் பிரச்சினையில் மத்தியஅரசு எடுத்துள்ள முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கருணாநிதியின் இந்த யோசனையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் கருத்துக்களும், கூட்டணிக்கட்சிகளின் ஒற்றுமையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இனிமேல் இது போன்ற சிக்கலான பிரச்சினையில் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு கருத்துதெரிவிக்கும்படி கூட்டணிக் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன்.
கருணாநிதி ஒரு சிறந்த அனுபவமிக்க, பொறுப்புள்ள தலைவர். இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான் என்று அவர் கூறுவதைத் தடுக்கயாருக்கும் உரிமையில்லை. மேலும், கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு எழுந்தால் அப்போது தனது கருத்தைபிரதமரிடம் தெரிவிக்கவும் அவருக்கு உரிமை உள்ளது.
இலங்கையில் தனி ஈழம் அமைவதை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இலங்கை அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனால்,இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அவர்களது உரிமைகள் காக்கப்பட்டு தக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்என்பதே மத்திய அரசின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஐரோப்பிய குடியரசில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஆனால், இலங்கைப்பிரச்சினையில் அப்படி செய்யமுடியாது.
2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பாதிப்பு இருக்கும் என்று தெரியவில்லை.அதற்குள் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. மத்திய அரசுக்கோ, பாஜகவுக்கோ எந்தநிர்பந்தத்தையும் அளிக்கவில்லை என்றார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications