தமிழகத்தில் இன்று
ஜூ-ன்06, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
5. துரியோதனன் பொறாமை
(வேறு)
எண்ணிலாத பொருளின் குவையும்
யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும்
மண்ணிவர்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையுமாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரிதா ட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் (19)
(வேறு)
பாண்டவர் முடியுயர்த்தே -இந்தப்
பார்மிசை யுலவிடு நாள்வரை , நான்
ஆண்டதோர் அரசா மோ? - எனது
ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ?
காண்டகு வில்லுடை யோன் - அந்தக்
காளை யருச்சுனன் கண்களி லும்
மாண்டகு திறல்வீ மன் - தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துளதே! (20)
பாரத நாட்டி லுள்ள - முடிப்
பார்த்திவர் யார்க்குமொர் பதி யென்றே
நாரதன் முதன்முனி வோர் -வந்து
நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்
சோரனவ் வெதுகுலத் தான் - சொலும்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்
வீரமி லாத்தரு மன் - தனை
வேந்தர்தம் முதலென விதித்தன வே (21)
ஆயிரம் முடிவேந் தர் - பதி
னாயிர மாயிரங் குறுநிலத் தார்
மாயிருந் திறைகொணர்ந்தே - அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திடவோ?
தூயிழை யாடைகளும் - மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படுமோ?
சேயிழை மடவாரும் - பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகை யோ? (22)
ஆணிற்பொற் கலசங்களும் -ரவி
யன்னநல் வயிரத்தின் மகுடங்க ளும்
மாணிக்கக் குவியல்களும் - பச்சை
மரகதத் திருமணி தாம் - பல
புதுப்புது வகைகளிற் பொலிவனவும்
காணிக்கை யாக்கொணர்த் தார் - அந்தக்
காட்சியை மறப்பதும் எளிதா மோ? (23)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications